இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Monday, June 11, 2012

சீறியெழும் சிறுத்தையாக விளங்கிய – இன்றைய ஷபீகுர் ரஹ்மான்


லால்பேட்டையில் முதல் முஸ்லிம் லீக் மாநாடு……
/
  • லால்பேட்டை பெருமக்களை வரலாற்றில் பதிய வைத்ததை பெருமை படுத்தும் விதத்தில் கண்ணியத்திற்குரிகாயிதேமில்லத் அவர்களின் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்…
/
1958 ஜுன் மாதம் 6-7 தேதிகளில் தென்னாற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாடு, சிதம்பரம் காட்டுமன்னார்குடி பிரதான சாலையின் அருகில் அமைந்திருந்த புதுநகர் என்றும்,தெற்குத் தோப்பு என்றும் சொல்லப்படும் தோப்பில் நடைபெற்றது.
/
காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்,லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியுமான மவ்லானா எஸ்.ஏ.அப்துல் பாஸித் சாஹிப் முன்னிலை வகித்தார்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி முதல்வர் ஷைகுல் மில்லத் அல்லாமா ஜியாவுத்தீன் அஹமத் அமானீ ஹஸரத் அவர்கள்,துஆ ஓதி மாநாடின் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
/
சிறந்த செயலாளராகாத் திகழ்ந்த லால்பேட்டை மவ்லானா முஹம்மது சுல்தான் பாகவி அவர்கள் முறைப்படி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.மவ்லானா எஸ்.எம்.அப்துல் ஜப்பார் பாகவி மாநாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
/
மாநாடு நடைபெற்ற தீரர் திப்பு நகர் திடலின் முகப்பில்,சொல்லின் செல்வர் ரவணசமுத்திரம் எம்.எம்.பீர் முஹம்மது,பிரமாண்டமான அணிவகுப்புடன் முஸ்லிம் லீக் கொடியை ஏற்றிவைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.ஜமாலி சாஹிப் அவர்கள்-
முஸ்லிம்களுக்கு, அவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப – விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.மற்றும் அரசின் அனைத்துத்துறைகளிலும் முஸ்லிம்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்;அதே போல், சட்ட மன்றம், நாடாளுமன்ற அவைகளிலும் முஸ்லிம்களுடைய எண்ணிக்கைக்கேற்ப உண்மையான பிரதிநிதிகள் இடம் பெறத்தக்க வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அரசு துரிதமாகச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.
/
தீர்மானத்தை வழி மொழிந்து தென்ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் கன்வீனர் தா.சயீத் சாஹிப் பேச,மக்கள் தக்பீர் முழங்கித் தீர்மானம் நிறைவேறச் செய்தனர்.
/
மாநில பொதுச்செயலாளர் ஜனாப்.கே.டி.எம்.அஹமது இப்ராஹீம் சாஹிப் பி.ஏ.பி.எல்.,கேரளச்சிங்கம் சி.எச்.முஹம்மது கோயா சாஹிப்,சேலம் டி.அப்துல் பாசித் சாஹிப்,தளபதி திருப்பூர் ஏ.எம்.மொய்தீன்,மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் ஏ.எம்.யுசுப்,சிந்தனைச்செல்வர் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமது,வடகரை எம்.எம்.பக்கர்,கே.எஸ்.அப்துல் வஹாப் ஜானி சாஹிப்,மவ்லவி முஹம்மது ஆதம் பாகவி,மவ்லானா அப்துல் பஷீர்,மதுரை மவ்லவி எஸ்.இ.முஹம்மது அலி நுரி ஆகியோர் உரையாற்றினார்.
/
இந்த மாநாடு நடக்கும்போது பனிரெண்டு வயது எய்திய சிறுவராக இருந்த இன்றைய மவ்லவி தளபதி ஷபீகுர்ரஹ்மான் இந்த மாநாட்டில் முதன் முதலில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
/
மாநாட்டின் வெற்றிக்கு சிறப்பு சேர்த்த பெருமைக்குரியவர்களாக ஜனாப் டி.ஏ.அப்துல் ஹலீம் சாஹிப் அவர்கள் தலைமையில் அமைந்த வரவேற்பு குழுவினர் விளங்குகிறார்கள்.இக்குழுவில்
/
ஷைகுல் மில்லத் அமானி ஹஸ்ரத்,முத்தவல்லி அப்துல் பாசித்,ஏ.பி.அப்துல் வஹாப்,மவ்லவி அப்துல் ஜப்பார்,மவ்லவி முஹம்மது சுல்தான்,எஸ்.எஸ்.நூர் ஹாஜியார்,மவ்லவி அப்துல் ஹக்,மவ்லவி முஹம்மது இக்லீல்,ஏ.எம்.அப்துல் மஜீத்,கே.எஸ்.அப்துல் கபூர்,ஏ.கே.அப்துல் மஜீத்,எஸ்.ஏ.பீர் முஹம்மது,மவ்லவி எம்.எஸ்.அப்துல் ஹக்கீம்,கத்தீப் கே.ஜி.அப்துல் ஜப்பார்,டி.ஏ.அப்துல் ஜப்பார்,ஆயங்குடி மவ்லானா அப்துல் ஜப்பார்,கொள்ளுமேடு என்.முஹம்மது அலி,கோட்டகுப்பம் டி.பி.முஹம்மது இஸ்மாயில்,மங்கலம்பேட்டை அப்துல் வாஹித் ஹஸ்ரத்,ஆயங்குடி அப்துல் குத்தூஸ்,விழுப்புரம் முஹம்மது இஸ்மாயில்,காட்டுமன்னார்குடி சந்தா சாஹிப்,பரங்கிப்பேட்டை டி.ஜெய்னுலாப்தீன் மரைக்காயர்,நெல்லிக்குப்பம் மவ்லவி முஹம்மது யாசீன்,முஹம்மது பாக்கவி,முஹம்மது லெப்பை.
இறுதியாக காயிதேமில்லத் அவர்கள்,நாட்டின் அரசியல் நிலவரம்,சமுதாயம் பேணிப் பின்பற்ற வேண்டிய ஒற்றுமை,கட்டுப்பாடு மற்றும் முஸ்லிம்லீக் செயல்பாடுகள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
/
சிறுவர் முஸ்லிம் லீக் மாநாடு
/
1958 ஆகஸ்ட் 8 ஆம் தேதி லால்பேட்டை நகரில்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லுஉரி பின்புறம் அமைந்திருந்த திடலில் தென்னாற்காடு மாவட்ட முஸ்லிம் லீக் சிறுவர்கள் மாநாடு நடைபெற்றது. சிறுவர்கள் சார்ந்த இந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தவர்,அன்றைய பனிரெண்டு வயது எய்தப் பெற்ற துடிப்பும்,துணிச்சலும் மிக்க சிறுவராக விளங்கிய – இன்றைய தளபதி – மவ்லவி ஷபீகுர் ரஹ்மான் என்றால் அனைவரும் வியக்கவே செய்வார்கள்.
/
ஆனால் உண்மை தான், அன்று சிறுவர் சம்மந்தப்பட்ட அந்த சிறப்பான மாநாட்டின் தலைமை ஆசனத்தை அலங்கரித்தவர் அன்றைய – சீறியெழும் சிறுத்தையாக விளங்கிய – இன்றைய ஷபீகுர் ரஹ்மான் ஹஸ்ரத் தான்!
/
அன்று,மூத்த முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவராக இருந்த மவ்லானா பி.எம்.முஹம்மது சுல்தான் சாஹிப் அவர்களின் அன்புச்செல்வர் பி.எம்.முஹம்மது தாவூஸ் வரவேற்று பேசினார்.த.எஸ்.முஹம்மது அலி முஸ்லிம் லீக் கொடியேற்றினார்.
எஸ்.முஹம்மது இப்ராஹீம்,எஸ்.எஸ்.அபுல் ஹசன்,ஆயங்குடி அப்துல் ரஷீத்,ஷேக் பரீத் ஆகியோர் உரை நிகழ்த்தினர் அனைவருமே சிறுவர்கள் தான்.
/
இதைத்தொடர்ந்து ஆயங்குடியிலும் சிறுவர்கள் மாநாடு சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்கள் நடத்திய மாநாடுகளுக்கு ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹஸ்ரத்,மவ்லவி அப்துல் ஹக்,மவ்லவி முஹம்மது இக்லீல்,டி.எம்.அப்துல் ஹலீம்,ஏ.கே.அப்துல் மஜீத்,முத்தவல்லி மவ்லவி அப்துல் பாசித் முதலான மூத்த தலைவர்கள் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கி,சிறுவர்களை ஊக்குவித்தார்கள்.
/
(எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய முஸ்லிம் லீக் நுற்றாண்டு வரலாறு 1948-1972 இரண்டாம் பாகம் நூலிலிருந்து…)

No comments:

Post a Comment