இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Saturday, June 18, 2011

தளபதி ஷஃபிகுர் ரஹ்மான் அவர்களுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கப்பட்​டது

திருச்சி,ஜுன்,18
பொது வாழ்வில் பொன் விழா கன்ட தளபதி ஷஃபிகுர் ரஹ்மான் அவர்களுக்கு கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 116 வது பிறந்தநாள் நினைவாக இன்று 18 .06 .2011 திருச்சியில் நடைப் பெற்றவிழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களால் காயிதெ மில்லத் விருது வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் சர்வதேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கினைப்பாளருமான எம்.அப்துல் ரஹ்மான் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர் உள்ளிட்ட முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் ,அனைத்து மாவட்ட தலைவர்,செயலாளர் மற்றும் சமுதாய பிரமுகர்கள் ஜமாத்துக்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தளபதிக்கு விருது வழங்கும் விழா-அது சமுதாய மாந்தருக்கு திருவிழா,

கண் விழித்து-கருத்தறிந்த காலம் தொட்டு,

லீக்கின் கொடியை தூக்கிப் பிடித்து

நாக்கில் தக்பீர் நாதம் உரைத்து-இறை வாக்கின் வழியில் வாழக்கற்று

முஸ்லிம் லீக்கெனும் முதுபெரும் இயக்கத்தின் தொண்டனாய்-

தலைவனாய் துலங்கி நிற்கும்-எங்கள் தோழரே! தளபதியே!

இன்று காயிதெமில்லத் விருது பெறும் தங்களை இதயத்தால் வாழ்த்தி
பன்னலம் கொண்டு பல்லாண்டு வாழ்ந்து

ஈமானின் சுடரோடு என்றும் ஒளிர்ந்துசீமான் தனத்தோடு சிறப்புகள் பெற்று
வாழ்வாங்கு வாழ வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறோம்.

கவிஞர்-ஏ.எம்.முஹிப்புல்லாஹ் ஜித்தா.

Tuesday, May 10, 2011

பெங்களூரு தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி பொன் விழா துவக்கவிழா..

பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியின் துவக்க விழா மற்றும் கல்லூரியின் பள்ளிவாசல் விரிவாக்கப் பணி விழா ஆகியவை கடந்த 6ம் தேதி வெள் ளிக் கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற் றது.

முதல் அமர்வு இவ்விழாவிற்கு கல்லூரி யின் முதல்வர் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜ்ரத் தலைமை தாங்கி னார். ஆல் இந்தியா பர்ச னல்லா போர்டு தலைவர் மௌலானா ஷாஹ் ஸய்யித் முஹம்மது ராபிஃ ஹசன் நத்வி முன்னிலை வகித்தார்.

ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல்லா போர்டு செயலாளர் மௌலானா சைய்யத் நிஜாமுத்தீன், மௌலானா ஹகீம் முஹம்மது அப்துல்லா முகீஸீ, வாணியம்பாடி தாருல் உலூம் மஃஅதனில் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது வலியுல்லாஹ் ரஷாதி, மௌலானா அப் துல் கரீம் ரஷாதி, பெங்க ளூரு ஜாமிஆ மஸ்ஜித் இமாம்மௌலானா முஹம்மது ரியாலுர் ரஹ்மான் ரஷாதி, திருச்சி மௌலானா முஹம்மது ரூஹுல் ஹக் ரஷாதி ஆகி யோர் உரையாற்றினர்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மதரஸாவின் சேவை, அல்லாமா அமீரே ஷரீஅத் மௌலானா அபூ ஸவூத் ஹஜ்ரத் (ரஹ்) அவர்களின் தூய எண்ணத் துடனான மார்க்க சேவை, இக்கல்லூரியின் முதல்வர் முஃப்தி மௌலானா அஷ் ரப் அலி ஹஜ்ரத் அவர் களின் மார்க்க சேவை ஆகி யவை பற்றி விரிவாக ஆங் கிலத்தில் உரையாற்றினார்.

கல்லூரியின் இணையதளம் துவக்க விழா

பெங்களூரு ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் இணைய தளத்தை மாநிலங் ளவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் துவக்கி வைத்தார். இதில், கல்லூரியின் துவக்கம் முதல் பொன் விழா வரையிலான நிகழ்சி களின் தொகுப்புகள், கல்லூ ரியின் பாட திட்டங்கள் ஆகியவை இடம் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டு சுமார் 4ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத் தக் கூடிய அளவிற்கு விரி வாக்கம் செய்யப்பட்டுள் ளது.

பள்ளியினை திறந்து வைத்து மக்கா முகர்ரமா வின் மதரஸா சவ்லதிய்யா அரபிக் கல்லூரியின் முதல் வர் மௌலானா மாஜித் மஸ்ஊத் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஜும்ஆ குத்பா மற்றும் தொழுகை நடத்தி னார்.

இரண்டாம் அமர்வு

பொன்விழா நிகழ்ச்சி களின் முதல் நாள் நிகழ்ச்சி யின் இரண்டாம் அமர்வு மாலை மக்ரிபு தொழுகைக் குப் பிறகு துவங்கியது. சமுதாய தலைவர்கள், கர்நாடக அரசியல் பிர முகர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், உலமாக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநிலங்களவை துணைத் தலைவர் கே.ரஹ் மான் கான் தலைமை தாங்கி னார்.

இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மத்திய ரயில்வே இணை யமைச்சர் கே.ஹெச். முனி யப்பா, கர்நாடக மாநில அமைச்சர்கள் மும்தாஜ் அலி கான், ஆர். அஷோக், சட்டமன்ற உறுப்பினர்கள் கமருல் இஸ்லாம், ஜமீர் அஹ்மது கான், ரவ்ஷன் பேக், தன்வீர் சேட்,

மேலவை உறுப்பினர் கள் நஸீர் அஹ்மது, அப் துல் அளீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எம். இப்ராஹீம் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமு கர்கள் கலந்து கொண்ட னர்.

மூன்றாம் அமர்வு

இரவு 9.30. மணிக்கு கல்லூரியின் மாணவர் களுக்கு பரிசளிப்பு நிகழ்ச் சியாக துவங்கியது. மௌ லானா ஹகீம் முஹம்மது அப்துல்லாஹ் முகீஸி தலைமை தாங்கி கல்லூரி தேர்வுகளில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பு ரையாற்றினார்.

இவ்விழாவில் மௌ லானா காலித் சைபுல்லா ரஹ்மானி, மௌலானா முஹம்மது அய்யூப் ரஹ் மானி, மௌலானா முஹம் மது லுத்புல்லாஹ் ரஷாதி ஆகியோர் உரையாற்றினர்.

Wednesday, May 4, 2011

தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி பொன்விழா - பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பங்கேற்கிறார்

பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா, கல்லூரியின் பள்ளிவாசல் விரிவாக்கப்பணி துவக்க விழா, மற்றும் பட்ட மளிப்பு விழா ஆகியவை வரும் 6,7,8, ஆகிய தேதி களில் நடைபெறுகின்றன. 

இவ்விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்ற னர்.

பொன்விழா, பள்ளிவாசல் விரிவாக்கப்பணி துவக்க விழா, பட்டமளிப்பு விழா

தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி 1960ம் ஆண்டு பெங்களூ ருவில் தமிழகத்தைச் சேர்ந்த மௌலானா அமீரே ஷரீஅத் அபூ ஸவூத் பாகவி ஹஜ்ரத் (ரஹ்) அவர்களால் துவக்கப்பட்டது. இக்கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா தற் போது நடைபெற உள்ளது. இக்கல்லூரியில் பயின்று மௌலவி, பாஜில், முஃப்தி, ஹாபிழ் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் இக்கல்லூரியின் நிறுவனரும், இந்தியாவின் தலைசிறந்த ஆலிமாக திகழ்ந்தவருமான மர்ஹும் மௌலானா அமீரே ஷரீ அத் அபூ ஸவூத் அஹ்மத் பாகவி ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் மார்க்கத்திற்காக ஆற்றியதியாக மிகுந்த சேவையை பற்றிய கருத் தரங்கம் நடைபெறுகிறது.

மூன்று நாட்கள்
வருகிற 6,7 மற்றும் 8 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெறும் நிகழ்ச்சிகளுக்கு கர்நாடக அமீரே ஷரீஅத் தும், தாருல் உலூர் ஸபீலுர் ரஷாத் அரபிக் கல்லூரி யின் முதல்வருமான மௌ லான முஃப்தி முஹம்மது அஷ்ரஃப் அலி ஹஜ்ரத் தலைமை தாங்குகிறார். இந்திய குடியரசு துணைத் தலைவர் எம்.ஹமீது அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் டாக்டர் ரஹ்மான் கான், கர்நாடக மாநில ஆளுநர் ஹெச்.ஆர். பரத்வாஜ், முதல்வர் பி.எஸ். எடியூரப்பா,

தலைவர் பேராசிரியர் மற்றும் தமிழக உலமாக்கள்
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய தலைவர் மௌ லானா செய்யது முஹம் மது ராபி ஹசன் நத்வி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் மாநில செயலா ளர் மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத், வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூ ரியின் முதல்வர் பேராசி ரியர் மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் ஹஜ்ரத், லால்பேட்டை மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வர் பேராசி ரியர் நூருல் அமீன் ஹஜ் ரத், வாணியம்பாடி மஃஅதினில் உலூம் அர பிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மௌலானா முஹம்மது வலியுல்லா ஹஜ்ரத், ஈரோடு தாவூ திய்யா அரபிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத், மதுரை குர்ஆனின் குரல் ஆசிரியர் மௌலானா முஹம்மது அஷ்ரப் அலி ஹஜ்ரத், குடியாத்தம் தாருல் உலூம் ஸயீதிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது அய்யூப் ஹஜ்ரத், திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் பேராசி ரியர் மௌலானா ருஹுல் ஹக் ஹஜ்ரத், லால் பேட்டை மௌலானா காரி முஹம்மது அஹ்மத் ஹஜ்ரத், சென்னை புரசை வாக்கம் ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌ லானா கே. எம். நிஜாமுத் தீன் மன்பஈ ஹஜ்ரத் மற் றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து உலமாக் கள், சமுதாய சேவையாளர் கள், சமுதாய பிரமுகர்கள், கலந்து கொண்டு சிறப்பு ரையாற்ற உள்ளனர்.

Saturday, April 2, 2011

நாகையில் ஷேக் தாவூதை ஆதரித்து தலைவர் பேராசிரியரும் ,மத்திய அமைச்சர் நெப்போலியனும் பிரச்சாரம்

நாகையில் வெள்ளிக்கிழமை மாலை  இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹமத் ஷேக் தாவூதை ஆதரித்து தலைவர் பேராசிரியரும் ,மத்திய அமைச்சர் நெப்போலியனும் பிரச்சாரம் செய்தபோது எடுத்தப்படம்

ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளரும், மூ.மு.க. தலை வருமான ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் நேற்று பி.முட்லூர், சிதம்பரம் நகர பகுதிகளில் வாக்கு சேகரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் மூ.மு.க. இளைஞரணி தலைவர் ரவி வாண்டையார், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செல்வராஜ், , மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர்,இளைஞர் அணி அமைப்பாளர் சிதம்பரம் எம்.தாஜுத்தின்,துணைத் தலைவர் ராஜ ரஹீமுல்லா ,தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ்,ஏ.எஸ்.அஹமத்,சிதம்பரம் நகர தலைவர் முஹமத் அலி,செயலாளர் ஏ.முஹமத் பைசல்,பொருளாளர் மௌலானா ஷாகுல்ஹமித்,எம்.காஜா ஹுசைன், பரங்கிப்பேட்டை நகர தலைவர் முஹமத் பசிர் ,மற்றும் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் ,ஜமாஅத் தலைவர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள்,உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளானோர் பங்கேற்றனர்.