இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Tuesday, November 16, 2010

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்
தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
 
 தியாகச் சீலர் செய்யிதுனா நபி இப்ராஹிம் (அலை), செய்யிதுனா நபி இஸ்மாயில் (அலை)இவர்களின் தியாக மிகுந்த வரலாற்றை நினைவுப்படுத்தும் இப்புனித பெருநாளில் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அன்பார்ந்த வாழ்வை பேணி புனித பெருநாளை பூரிப்புடன் கொண்டாடி மகிழ்வோம் நம்முடைய தனி வாழ்விலும்,பொது வாழ்விலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து ஒன்றுப்பட்ட சமுதாயமாக வாழ்வோமாக !
 
  ஈத் முபாரக்.!

Wednesday, October 20, 2010

ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்

ஆயங்குடியில் 17 தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது.


நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா முஹமத் மன்சூர் கிராஅத் ஓதினார், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ்.மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர் நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஹெச்.முஹமத் இக்பால் வரவேற்றுப்பேசினார்.

இக்கூட்டதில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.சிறப்புரையாற்றினர் மௌலானா பி.ஏ.ஜபார் அலி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ஆயங்குடி ஊராட்சி தலைவர் நாகராஜன் மாவட்ட தலைவர் தலைவர் கே.ஏ.அமனுல்லா , துணைத்தலைவர் எம்.ஐ.அப்துல் வதுத், செயலாளர் ஏ.சுக்கூர் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தின் நன்றி கூறினார்.


ஆயங்குடியில் எம் .அப்துல் ரஹ்மான் எம் பி. தமிழக அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.


ஆயங்குடியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற எம் .அப்துல் ரஹ்மான் அயங்குடி ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் வீடு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் இந்திரா நினைவு தொகுப்பு வீட்டின் கட்டிடப்பணிக்கு அடிக்கல் நாட்டினர் அத்தோடு ஆயங்குடியில் கட்டப்பட்டு வரும் தமிழக அரசின் நலத்திட்டங்களான தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தண்ணீர் டேங்குகளையும் கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளையும் பார்வையிட்டு நலத்திட்ட பணிகளை கேட்டறிந்தார்.


ஆயங்குடி ஊராட்சி மன்றத்தலைவர்  டி.நாகராஜன் துணைத்தலைவர் ஏ.ஆர்.நிஜார் அஹமத் ஆகியோர் வரவேற்றனர் இந் நிகழ்வுகளில் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ் ,ஏ.முஹமத் ஆசிப் ,மௌலானா பி.ஏ.ஜபார் அலி.மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் மாவட்ட தலைவர் அமனுல்லா ,செயலாளர் சுக்கூர்,துணைத்தலைவர் எம்.ஐ. அப்துல் வதுத் ,ஆயங்குடி முஸ்லிம் லீக் தலைவர் முஹமத் ஹனீப் ,செயலாளர் சுல்தான் மொய்தின் ,பொருளாளர் முஹமத் இக்பால்,எஸ்.ஜாலலூத்தின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Friday, September 10, 2010

ஈகைத் திருநாள் தலைவர்களின் வாழ்த்துச் செய்தி!

எல்லோருக்கும் உடலை வருத்தி, உள்ளத்தைத் திருத்தி, தன்னிலை உணர்ந்து, பிறர்நிலை அறிந்து, தாழ்ந்து கிடப்போரின் உயர்வுக்கு உதவிபுரிந்து வாழும் சிறந்த வாழ்வு முறையைக் கற்பிக் கிறது. ஒரு மாதம் முழு வதும் பெற்ற பயிற்சி யையும் கற்ற பாடத் தையும் ஆண்டு முழுவதும் நடைமுறைப் படுத்துவதில்தான் சிறப்பு அமைந்திருக் கிறது. இன்றையத் தேவை, எல்லாரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வே ஆகும். மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளை நீக்கவும், வன்முறை எண்ணம் மறையவும், எங்கும் எதிலும் நன்முறையும் மென் முறையும் நிறையவும், அமைதி வழியில் அறநெறியில் ஆக்கப்பூர்வ மாகப் பாடுபடுவோம். என்றும் அன்புடன் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்

பெருநாள் வாழ்த்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அன்பார்ந்த சகோதரர்கள் சகோதரிகள் உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஈதுல் பித்ர் இனிய` ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புனித ரமளானில் நோன்பின் மாண்பை பேணி,கண் சிவக்க திருக்குர்ஆன் ஓதி,கை சிவக்க வாரி வழங்கி ,கால் கடுக்க தொழுது வணங்கி புனித ரமளானை கண்ணியப்படுத்திய கண்ணியச்சீலர்களான உங்கள் அனைவர்களுக்கும் இனிய ஈத் முபாரக்

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்

பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

Sunday, August 22, 2010

அண்ணலாரின் அழகிய பூமியில் நோன்பின் மாண்பு

மௌலானா தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


முப்பத்தி எட்டு ஆண்டுகளாக மாண்புமிகு மதீனாவிலும் புனிதமிகு மக்காவிலும் நோன்பின் மாண்பை அனுபவித்து மகிழ்ந்த இனிய நிகழ்வுகளை தங்களிடையே பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்வெய்துகிறேன் .

உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது .நீங்கள் வல்ல அல்லாஹுத்த ஆலாவின் கட்டளையை ஏற்று வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அழகிய முன்மாதிரியை பேணிப் பின்பற்றி அல்லாஹுத்த ஆலாவின் அருள் புத்துக் குலுங்கும் புனித ரமலானின் பிறை தெரிந்த செய்தி சவூதி அரசால் அறிவிக்கப்பட்டதும் ஒவ்வொரு வரும் தங்களின் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் குடும்பத்தினர்கள் நண்பர்கள் ஆகியோரை தேடிச்சென்றும் தொலைபேசி மூலமும் அஹ்லன் வஸஹ்லன் ரமலான் முபாரக் என்று வாழ்த்தை தெரிவித்து மகிழ்வார்கள் .மாண்புமிகு மஸ்ஜிதுன் நபவி எனும் பெருமானார் அவர்களின் மஸ்ஜிதில் தொழச்செல்லும் லட்சக்கணக்கான தீனோர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் ரமலான் முபாரக் இனிய வாழ்த்துச் செய்தியை தெரிவித்து பூரிப்படைவார்கள்.

நம் உயிருக்குயிரான - உயிரினும் மேலான நபிகள் பெருமானார் ரசூலே கரீம்( ஸல் ) அவர்கள் எங்கு பிறந்தார்களோ - வணங்கினார்களோ எந்த இடத்தில நோன்பு கடமையாக்கப்பட்ட வஹீ அருளப்பட்டதோ அந்த இடத்தில் நபிகள் பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்களோ, இஃதிகாப் இருந்தார்களோ - கியம்லைல் தொழுகை தொழுதார்களோ தொழவைத்தார்களோ அந்த இடத்தில் நோன்புப் பெற்றிருக்கும் மாண்பை சொல்லவா வேண்டும்?

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்கள் தொழுத -தொழவைத்த புனித மஸ்ஜிதுன் நபவியில் இன்றும் நோன்பு திறக்கும் காட்சி அற்புதமானது லட்சக்கணக்கான மக்கள் நோன்பு திறக்கும் இடத்தில் இன்னமும் அந்த அமைதியை பார்க்கிறோம் நோன்பு திறக்கும் நேரத்தில் புனித ரவ்லா ஷரீபில் சென்றால் ஒவ்வொருவர்களும் மற்ற சகோதரர்களை உபசரித்து மகிழும் காட்சி கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் கல்புக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .

மக்கா முகர்ரமாவிலுள்ள அருள்மிகு புனித ஹரம் ஷரீபிலும் மதீனா முனவ்வராவிலுள்ள புனித மஸ்ஜித் நபவியிலும் நோன்பின் மாண்பு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது .நோன்பின் மாண்பை மக்காவிலும் ,மதீனாவிலும் அனுபவித்து இன்புற்று மகிழ்ந்திட உலகெங்குமிருந்தும் இறை நேசர்களின் கூட்டம் உம்ராவுக்காக அணி அணியாக வந்துக்கொண்டிருக்கிறது பார்க்கும் இடம் எல்லாம் தீனோர்களின் கூட்டம் தான் மக்கா முகர்ரமாவில் புனித மிகு ஹரம் ஷரீபில் ஒரு கூட்டம் தொழுது மகிழ்ந்து கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம் தவாஃபு செய்து மகிழ்ந்துக்கொண்டிருக்கும்,மேலும் திருக்குர்ஆன் ஷரீப் ஓதிக்கொண்டும் ,இயலாதவர்கள் கஃபத்துல்லாஹ்வை பார்த்து மகிழ்ந்துக்கொண்டும் இருப்பார்கள் இத்தகைய இனிய காட்சிகளை எல்லாம் பார்க்கும் நம் நெஞ்சம் மகிழ்கிறது .அருள்மிகு புனித ரமலானில் உம்ராவை நிறைவேற்றி தவாஃபு நிறைவு செய்திடவும் .வள்ளல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்லா ஷரீபில் சலாம் சொல்லி மகிழ்ந்திடவும் சுவனத்தின் சோலை வளமான ரவ்லா ஷரீபில் தொழுது மகிழ்ந்திடவும் நம் அனைவருக்கும் கருணையுள்ள ரஹ்மான் அருள் புரிவானாக ! ஆமின் .

Sunday, August 1, 2010

சிதம்பரம் நகரில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் 25.7.2010 ஞாயிறு மாலை 5 மணிக்கு சிதம்பரம் ஏ. ஆர். மஹாலில், லால்பேட்டை ஹாஜி எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு.

தலைவர் கே.ஏ. அமானுல்லா (லால்பேட்டை), செயலாளர் ஏ. சுக்கூர்(விருத்தாசலம்), பொருளாளர் டி. அப்துல் கபார் கான்( சிதம்பரம்), கௌரவ ஆலோசகர் எஸ். ஏ. அப்துல் கப்பார்(லால்பேட்டை), துணைத் தலைவர்கள் ஏ.கே. ஹபீபுர் ரஹ்மான்(விருத்தாசலம்), வி.எம்.ராஜா ரஹிமுல்லா(நெல்லிக்குப்பம்), எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா(சிதம்பரம்), எம்.ஐ. வதூத் (ஆயங்குடி), துணைச்செயலாளர்கள் கே. லியாகத் அலி (விருத்தாசலம்), வி.ஆர். முஹம்மது பைசல் (சிதம்பரம்), அப்துல் ரஹ்மான் (விருத்தாசலம்), என். அக்பர் அலி (கடலூர்),

முஸ்லிம் லீக் இளைஞர் அணி அமைப்பாளர் எம். தாஜுதீன் (சிதம்பரம்), முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பாளர் எம். ராஜா முஹம்மது (பண்ருட்டி) , சுதந்திர தொழிலாளர் ய+னியன் அமைப்பாளர் கே. அஷ்ரப் அலி (நெல்லிக்குப்பம்), மகளிர் அணி அமைப்பாளர் ஜெ. யாஸ்மின் ஜாபர் ஷரீப் (செம்மண்டலம்) , மாநில பிரதிநிதிகள் ஏ. ஷபிகுர் ரஹ்மான் (லால்பேட்டை), டி. அப்துல்கப்பார்கான் (பி. முட்லூர்).

Thursday, July 1, 2010

தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் 22-08-1993 அன்று நடந்த சிதம்பரம் வட்டார இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு

மௌலான தளபதி ஷபிகுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் 22-08-1993 அன்று நடந்த சிதம்பரம் வட்டார இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடும் அதையொட்டி 50ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பேரணியும் நடைபெற்ற பொது எடுத்த புகைப்பட காட்சி

Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

கொங்கு மண்டலத்தில் நடைப்பெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வெற்றிச் செய்திகளை நாள் தோறும் கேட்டு மகிழ்கிறோம் முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைப்பெற இருக்கும் இந்த சிறப்பான உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்று உலகில் இது வரையில் யாரும் மாநாடு நடத்தவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சொல்லிக்காட்டி இருப்பது சரியான செய்தியாகும்.


உலகெங்குமிருந்தும் அறிஞர் பெருமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரபு நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ப்பத்தின் மூலம் தமிழகத்துக்கும் -அரபகத்துக்குமுள்ள நெருக்கத்தையும் நேசத்தையும் காட்டுகிறது நம் நாட்டு அரசியல் நிர்ணயச் சபையில் என் தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்குங்கள் .

Tuesday, June 15, 2010

லால்பேட்டையில் தலைவர் பேராசிரியருக்கு உற்சாக வரவேற்பு

கடலூர் மாவட்டம் லால்பேட்டை வருகை தந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுககு நகரெங்கும் உறசாக வரவேற்பளிககபபடடது.


சிதம்பரம் ரயில் நிலை யத்தில் அதிகாலை 4 மணிக்கு லால்பேட்டை இளைஞர் அணி அமைப்பாளர் மவ்லவி ஏ. நூருல் அமீன்,மாணவரணி அமைப்பாளர் சல்மான பாரிஸ், ஏ.எஸ்.அஹமது உள்ளிட்ட இயக்க முன்னோடிகள் தலைவருக்கு வரவேற்பளித்தனர்.


காலை 10 மணிக்கு லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை தலைவர் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து லால்பேட்டை நகரின் பல்வேறு இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை ஏற்றி வைத்தார்.

Monday, June 7, 2010

காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!


காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!


கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் பங்கேற்க்க வந்த தமிழக முதல்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயளாலரும் தமிழக தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொய்தீன்,மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,சட்ட மன்ற உறுப்பினர் ஹெச்.அப்துல் பாஸித்,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக முதல்வர் மலர் போர்வை போர்த்திய உடன் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயளாலர் தளபதி மெளலவி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

இநிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர் திரு தயாநிதி மாறன்,தமிழக செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம் வழுதி,விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்,சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள்,மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.


Friday, May 28, 2010

இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்


நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.

தாய்ச்சபை என் தாய் வீடு

13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்; தலைவர் பேராசிரியர் வேண்டுகோள்

வரலாறு படைக்கும் வகையில் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முஸ்லிம்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Friday, April 16, 2010

ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழக-அரபகத் தொடர்புகள்

ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தமிழக-அரபகத் தொடர்புகள்


தளபதி ஏ.ஷ ஃபிகுர் ரஹ்மான்

வருகின்ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக சிறப்பாக நடைபெறும் வகை யில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அம் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ் மொழி இலக் கியங்களுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்பு களை நினைவுகூர்ந்து பதிவு செய் யும் பணியை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின் றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2, 3 தேதிகளில் தஞ்சை அதிராம்பட்டினத் தில் நடைபெற்ற இஸ் லாமிய தமிழ் இலக்கியக்கழக இலக்கியப் பெருவிழாவும், அங்கு வெளியிடப்பட்ட ஆய்வு மலரும் அமைந்துள் ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மார்க்க அணி செயலாளர் ஏ. ஷபீகுர் ரஹ்மான் தமிழகத் திற்கும் - அரபகத்திற்கும் இடையே யான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், தமிழ் மொழியின் மீது தாய்ச்சபை தலைவர்கள் கொண்டிருந்த பற்று குறித்தும் ஆய்வு கட்டுரை வாசித்தார்.

அக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் வரு மாறு-

Wednesday, March 31, 2010

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக 14 ஆம் ஆண்டு பெருவிழா ஏப்ரல் 2,3,ஆகிய தேதிகளில் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது 02.04.2010. வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது இலக்கியக் கழக தலைவர் முனைவர் அய்யூப் தலைமை வகிக்கிறார் ,பொதுச்செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்ப்புரையாற்றுகிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினருமான எம்.அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றுகிறார் ,இந்நிகழ்ச்சியில் அறிஞர் பெருமக்கள் பலரின் நூலினை தமிழக அமைச்சர் உபையதுல்லா வெளியிட்டு உரையாற்றுகிறார் அதனை தொடர்ந்து

Saturday, March 27, 2010

புனித கஃபாவை நோக்கி ...!

புனித கஃபாவை நோக்கி ...!
தளபதி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான்
மாநில மார்க்க அணி செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்



உலகெங்கும் வாழும் ஒரு நூறு கோடிக்கு மேற்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினர் நாள்தோறும் எந்த புனித கஃபத்துல்லாஹ் ஷரீபை நோக்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுகிறார்களோ அநத புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றியும், புனித ஹஜ்ஜைப் பற்றியும் எழுதுவ திலும் பெரும் மகிழ்வடைகி றேன். அல்ஹம்துலில்லாஹ்...
புனித கஃபத்துல்லாஹ் ஷரீபைப் பற்றி நிறைய வரலாறுகளும், செய்தி களும் இருந்தாலும் வல்ல அல்லா ஹுத்தஆலா உலகை படைப் பதற்கு முன்னரே கஃபத்துல் லாஹ் ஷரீபை படைத்தான் என்றும், மலக்குமார்களால் கட்டப்பட்டது என்றும் சரி யான சரித்திரங்கள் சொல்லிக் காட்டு கிறது.
மூலப்பிதா - முதல் மனிதப் புனிதர் நபி ஆதம் அலை ஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்டது. அதன்பிறகு நபி நூஹ் (அலை) அவர்களாலும் கட்டப்பட்டது என்ற நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் தியாகச்சீலர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனிதமிகு கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப் பட்டது.
நபி இப்ராஹீம் கலீலுல் லாஹ் (அலை) அவர்களால் புனித கஃபத்துல்லாஹ் கட்டப்பட்ட செய்தியை திருக்குர்ஆன் ஷரீபின் மூலம் வல்ல அல்லாஹுத்த ஆலா நமக்கு தெரிவிக் கிறான்.
நபி இப்ராஹீம் (அலை) அவர் களாலும், நபி இஸ்மாயீல் (அலை) அவர்களாலும் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் கட்டப்பட்டு வல்ல அல்லா ஹுத்த ஆலா இடத்தில் யா அல்லாஹ் உன் கட்டளையை ஏற்று புனித கஃபத்துல்லாஹு ஷரீபை கட்டி பூர்த்தியாக்கி யுள்ளோம். இதை நீ, ஏற்றுக் கொள்வாயாக. அங்கீகரிப் பாயாக என பிரார்த்தித்துள் ளார்கள்.
வல்ல அல்லாஹுத்த ஆலா நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நோக்கி நீங்கள் ஹஜ்ஜுக்கு அழைப்பு கொடுங் கள் என்று கூறினான்.
அந்த அன்பான - தியாக மான அழைப்பை நோக்கித்தான் உலகெங் கும் வாழும் கோடான கோடி முஸ்லிம் சமுதாயத்தினர் புனித ஹஜ்ஜுக்காக புறப் படுகிறார்கள்.
லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வன் நிஃமத
லக்கவல் முல்க் லா ஷரீக்க லக்
எனும் உச்சாடனத்தை முழங்கி இறையச்சத்துடன் கஃபத் துல்லாஹ் ஷரீபை காணப் போகிறோம் என்ற ஆனந்தப் பெருக்குடன் புறப் படுகிறார்கள்.
புனித ஹஜ்ருல் நிய்யத் செய்தவர்களாக - புனித உம்ராவை நிய்யத் செய்தவர் களாக - இஹ்ராம் உடை அணிந்தவர்களாக வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது வணங்கி யவர்களாக புனித மக்கா நோக்கி புறப்படும் ஒவ்வொரு ஹாஜியிடமும் ஒரு வகையான இறையச்சத்தையும் தக்வா எனும் பரிசுத்த நிலை யையும் காண முடிகிறது.
புனித ஹஜ்ஜுக்காக இஹ்ராமை அணிந்து லப்பைக் எனும் உச்சாட னத்தை முழங்கி கஃபத்துல்லாஹ் ஷரீபை கண்ணால் பார்த்து மகிழ்ந்து, இரு கரமும் உயர்த்தி உள்ளத் தூய்மையுடன் உள்ளம் உருக துஆச் செய்து மகிழ்கிறோம்.
புனித ஹஜ்ருல் அஸ்வத் கல் முன்னே நமது கரம் உயர்த்தி துஆச் செய்து தவாஃபை துவக்குகிறோம்.
ஏழு சுற்று - புனித கஃபத் துல்லாஹ் ஷரீபை துஆச் செய்து மகிழ்கிறோம். தவாஃபின் 7 சுற்றும் பூர்த்தி பெற்ற பிறகு மகாமே இப்ராஹீம் முன்பே 2 ரகஅத் தொழுது துஆ செய்து மகிழ் கிறோம். புனித ஜம் ஜம் நீர் அருந்தி ஆனந்தம் அடை கிறோம்.
ஸஃபா மர்வா மலைக்குன் றுக்கிடையே ஸயீ செய் கிறோம். தொங்கோட்டம் ஓடுகிறோம். ஹஜ்ஜின் கேந்திரங்களான புனித மக்கா, புனித மினா, புனித அரஃபா, புனித முஜ்தலிபா இந்த இடங்களிலும் அமல் செய்து மகிழ்கிறோம்.
துல் ஹஜ்ஜு மாதம் பிறை 8, 9, 10, 11, 12, 13 இந்த புனித நாட்களில் புனித ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி ஒவ்வொரு ஹாஜியும் பூரிப் படைகிறார்கள். பிறை 8-வது நாளில் மினாவில் தங்கி வல்ல அல்லாஹுத்த ஆலாவை தொழுது குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும், துஆ செய்வதிலும் ஈடு பட்டு பாவங்களை போக்கி பரிசுத்தம் அடைவதற்கு ஹாஜிகள் தயாராகிவிடுகிறார் கள்.
துல்ஹஜ் பிறை 9-வது நாளில் புனித அரஃபா பெருவெளியில் தங்கி வல்ல அல்லாஹுத்தஆலாவை தொழுது வணங்கி - அழுது அழுது - தான் செய்து விட்ட பாவங்களையும், குறைகளை யும் சொல்லி - சொல்லி அழுது அல்லாஹுத்த ஆலா இடத்தில் முறையிடுகிறார்கள். பிறை 9-வது நாள் லுஹர் தொழுகை நேரத் திலிருந்து இரவு வரை துஆ செய்து கொண்டிருக் கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை காணும் போதே கண்ணுக்கு குளிர்ச்சி யாகவும கல்புக்கு மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது.
புனித அரஃபாவிலிருந்து புறப் பட்டு இரவில் முஜ்தலி பாவில் தங்கி வல்ல அல்லாஹ்வை தொழுது துஆ செய்கிறோம்.
பிறை 10-வது நாள் காலையில் பஜ்ர் தொழுகை யினை நிறைவேற்றி மினாவுக்கு மீண்டும் திரும்புகிறோம். மினாவில் ஷைத்தானை கல்லெறிவதற்கு முஜ்தலிபா வில் பொறுக்கிய கல்லை 10-வது நாள் காலையில் ஜும்ரத்துல் அக்பா எனும் பெரிய ஷைத்தானுக்கு பிஸ் மில்லாஹ் அல்லாஹு அக்பர் என முழங்கி கல்லெறிகிறோம்.
குர்பானி கொடுத்து மொட்டை யடித்து அல்லது தலைமுடியை குறைத்துக் கொள்கிறோம். பெண்கள் தலைமுடியின் ஒரு சிறு பகுதியை குறைத்துக் கொள் வார்கள். குளித்து புத்தாடை அணிந்து ஆனந்த பெருக்குடன் புனித கஃபத்துல்லாஹ் ஷரீப் சென்று தவாபு செய்து மகிழ் கிறார்கள்-ஸயீயை நிறைவேற் றுகிறார்கள்.
மீண்டும் மினாவுக்கு சென்று பிறை 11, 12, 13 வரை தங்கி மூன்று ஷைத்தான் களுக்கும் கல்லெறிகிறார்கள். மீண்டும் மினாவிலிருந்து மக்கா வந்து புனித மக்காவில் வாழும் கால மெல்லாம் தவாபு செய்து தொழுது வணங்குவார்கள்.
புனித ஹஜ்ஜு பூர்த்திப் பெற்று தாயகம் திரும்புகிறோம்.
வள்ளல் நபிகள் பெருமா னார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களிடத்தில் அருமை சஹாபாக்கள் புனித ஹஜ்ஜைப் பற்றி விளக்கங்கள் கேட் டார்கள். வினாக்கள் கேட்டார் கள்.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜைப் பற்றி கேட்ட சஹாபாக்களுக்கும் உலகம் முடிகின்ற வரையிலுள்ள கோடானு கோடி முஸ்லிம் களுக்கும் பதிலாக - விளக்க மாக உங்களின் ஹஜ்ஜில் என்னை பின் பற்றுங்கள்.
புனித ஹஜ்ஜின் கிரியை களில் நான் எப்படி செய்கிறேனோ அப்படி நீங்களும் செய்யுங்கள் என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
நம் அனைவரின் ஹஜ்ஜும் வள்ளல் நபிகள் பெருமானார் (ஸல்) அவர் களின் ஹஜ்ஜைப் போன்று புனிதம் பெற்றதாக திகழ கருணை யுள்ள ரஹ்மான் அருள்புரிவானாக.
உலகெங்குமிருந்தும் புனித ஹஜ்&க்காக வரும் லட்சக் கணக்கான ஹாஜிகள் ஹஜ் ஜுக்கு முன்போ அல்லது ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்போ மாண்புமிகு மதீனா வுக்கு சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் புனித பள்ளி யில் தொழுது-
வள்ளல் நபிகள் பெரு மானார் ரசூலே கறீம் அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லி சொல்லி மகிழ்வ டைவார்கள்.
நம் அனைவர்களுக்கும் புனித ஹஜ், புனித உம்ரா, பாக்கியங்களை அல்லாஹ் வழங்குவானாக.
வள்ளல் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்கள் தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழும் பாக்கியங்களை வழங்கி அருள்புரிவானாக.

Saturday, March 6, 2010

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழுச்சிமிகு வரவேற்ப்பு
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து

காட்டுமன்னார் கோயில் ,முட்டம் பாலம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் தளபதி
ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டைநகரில் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் ,கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் ,லால்பேட்டை நகர தலைவர் முகமத் ,பேரூராட்சி மன்றத்தலைவர் சபியுல்லா,நகர முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் அலி ,துணைத்தலைவர்கள் அப்துல் ஜெமில் ,தஹா முகமத் , அப்துல் ரசித்,துணை செயலாளர்கள் முகமத் தைய்யுப் ,ரஊப்,ஹிதயதுல்ல இளைஞர் அணி நூருல் அமின் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் சால்வை அணிவித்தனர்
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து
முஸ்லிம் லீக் மாணவர் அணியைச்சார்ந்த ஏ.எஸ்.அஹமத் தளபதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பென்னகரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள் என்ற செய்தியை தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறினார்

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகரெங்குமுல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,உலமாக்கள் ,ஜமாத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .தி.மு.க.மற்றும் தோழமை கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கான மக்களும் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் ,தளபதி ஸ்டாலின் ஜிந்தாபாத்,பேராசிரியர் காதர் மொகிதீன் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டு வரவேற்ற பொது துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்.

Sunday, February 28, 2010

இலங்கையில் பேராசிரயர் கே.எம்.கே,தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு உற்சாக வரவேற்பு!

இலங்கையில் பேராசிரயர் கே.எம்.கே,தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு உற்சாக வரவேற்பு!
இன்று காலை முதல் இரவு வரை இலங்கை நாட்டின் வெலிகமை நகரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா சார்பில் மீலாத் பெருவிழா நடைபெறுகிறது.



இலங்கை - இந்திய மார்க்க அறிஞர்களும், சமுதாய அறிவாளர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ள இவ்விழாவில், இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணிச் செயலாளர் மௌலானா தளபதி ஷஃபீகுர் ரஹ்மான், ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவதோடு, குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமீ (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூலை பேராசிரயர் கே.எம்.கே, வெளியிடுகிறார்.

காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

நாளை - மார்ச் 1ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தலைமையில் பேராசிரியர், மௌலானா தளபதி, உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து நிருபர் சந்திப்பும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.ரஃபீக், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி ஜவாஹிர், ஹாஜி ஆரிஃப் உமர் லெப்பை உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.

முன்னதாக, இலங்கை வருகை தரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினருக்கு வரவேற்பளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, இலங்கை காயல் நல மன்றத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் 26.02.2010 இரவு 7.30 மணியளவில் கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில், இலங்கை காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை வெலிகமை நகரில் நடைபெறவுள்ள மீலாத் விழாவில் நூல் வெளியிட்டு உரையாற்றுவதற்காக, இந்தியாவிலிருந்து வருகை தரும் இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினருக்கு மன்றத்தின் சார்பில் விமான நிலையம் வரை சென்று வரவேற்பளிப்பதென இக்;கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஹாஜி ஜவாஹிர், ஹாஜி எஸ்.எம்.பி.இஸ்மாயீல், ஹாஜி ஓ.எல்.எம்.ஆரிஃப், ஹாஜி எம்.என்.மக்கீ, ஹாஜி எஸ்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி டூட்டி முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி ஐ.கே.ஷாஜஹான், ஹாஜி பி.எம்.ரஃபீக் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

செய்தி ஊடக ஆராய்ச்சியக இலங்கை தூதுக்குழு பேராசிரியர் காதர் மொகிதீனுடன் சந்திப்பு!

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகமெங்கும் ஒலிபரப்ப ஆவன செய்யக் கோரி, காயல்பட்டினம் செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் தலைவர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர் ஆரிஃப், செயலர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகிய இருவரடங்கிய தூதுக்குழு இலங்கை சென்றுள்ளது.

அங்கு, இலங்கை காயல் நல மன்றத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்ஸன் சமரசிங்கேவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய பின், மேற்படி ஒலிபரப்பிற்காக இலங்கை மன்னார் பகுதியில் ஒலிபரப்புக் கோபுரமொன்றை நிறுவ ஆவன செய்வதாக அந்த இடத்திலேயே அவர் வாக்களித்தார்.

இச்செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டதோடு, இலங்கையின் தமிழ் - சிங்கள நாளிதழ்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், 27.02.2010 அன்று காலை இலங்கை வருகை தந்துள்ள, இந்திய யு+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் மேற்படி தூதுக்குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்பில் மௌலான தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், போர் நிறைவுக்குப் பிறகான இலங்கை பல்சமயத்தினரின் நிலை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் ஒலிபரப்பச் செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர்.

பின்னர் கருத்து தெரிவித்த போராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டு மண்ணில் தவழ்ந்து வந்த காலங்களில், இரு நாட்டு முஸ்லிம்களின் கலாச்சாரம், மார்க்க ரீதியான செயல்பாடுகள், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நல்ல தொடர்பு இருந்து வந்ததாகவும், மீண்டும் அந்த ஒலிபரப்பை தமிழகத்தில் கேட்கச் செய்கையில், தொய்வுற்றுள்ள இத்தொடர்பு மீண்டும் மலரும் என்றும் தெரிவித்தார்.

செய்தி ஊடக ஆராய்ச்சியகத்தின் தலைவர் சாளை எஸ்.எம்.ஏ.பஷீர், செயலர் எஸ்.கே.ஸாலிஹ், இலங்கை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி பி.எம்.ரஃபீக், செயற்குழு உறுப்பினர்கள் ஜவாஹிர், ஓ.எல்.எம்.ஆரிஃப் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Saturday, February 27, 2010

இலங்கை வெலிகமையில் மீலாதுந் நபி பெருவிழா!

வெலிகமையில் மீலாதுந் நபி பெருவிழா:
தலைவர் பேராசிரியர், தளபதி ஷபீகுர்ரஹ்மான் இலங்கைப் பயணம்

சென்னை, பிப்.26-
இலங்கை வெலிகமையில் அத்தரீக்கத்துல் ஹக்கியத் துல் காதிரிய்யா சார்பில் மீலாதுந்நபி பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி மாலையும் 28-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணி வரையும் நடைபெற உள்ள விழாவில் சங்கைக்குரிய உலமாக்களும், அறிஞர் பெருமக்களும் உரையாற்ற உள்ளனர்.
இந் நிகழ்ச்சியில் குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூல் வெளியிடப்படு கிறது.
தமிழகத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
அறபு - தமிழ் அகராதி நூலை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டு சிறப்புரையாற்று கிறார்.
மார்ச் 1-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஜ்வர் தலைமையில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து நிருபர் சந்திப்பும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காயல் ரபீக் உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.

Tuesday, January 26, 2010

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா
தளபதி ஷபிகுர்ரஹ்மான் பங்கேற்ப்பு!

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 61 வது குடியரசு தினவிழா 26.01.2010 அன்று சிறப்புடன் நடைபெற்றது

லால்பேட்டை பேரூராட்சி தலைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர் திலகம் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர்ரஹ்மான் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது

இந்தப் பள்ளியின் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோருடன் மாணவர்களின் அழகார்ந்த அணிவகுப்பில் அடியேனும் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டு நடந்து வந்தபோது 42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பள்ளியின் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்களுடன் என்.சி.சி.அணிவகுப்பில் தொண்டனாக நடந்து வந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்து பூரிப்படைகிறேன்
என் தாய் மொழியான தமிழ் மொழியை என் நாட்டின் ஆட்சி மொழியாக்குங்கள் என்று அரசியல் நிர்ணயசபையில் எடுத்துரைத்து தமிழ் மொழியின் பற்றை வெளிபடுத்தினார் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்கள் இந்தப் பள்ளியில் நடைப்பெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு வாழ்த்தியுள்ளர்கள் அவரின் வாழ்த்தால் இந்தப்பள்ளி இன்றும் சிறந்து இயங்குகிறது நம்முடைய இந்தியத்திருநாடு அறிவியல் துறையிலும் தொழில் துறையிலும் சிறந்து இயங்குகிறது பொருளாதாரத்தில் நல்ல மேன்பாடுகளை பெற்று வருகிறது சமீபத்தில் பெங்களுருவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமத் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பேசும்போது நம்முடைய இந்தியத்திருநாடு 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் பொருளாதாரத்திலும் சிறப்பு பெற்ற வல்லரசு நாடாக திகழப்போகிறது என்று குறிப்பிட்டதை இங்கே சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்திகொண்டிருக்கும் ஜனாப் சபியுல்லா மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளான ஏ.ஆர்.ரஷித் ,எம்.ஒ.அப்துல் அலி பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயதுல்லா ஆகியோரும் வருகைதந்திருந்தர்கள் அந்த மாநாட்டில் கல்வியின் அவசியம் பற்றி நம் தலைவர்கள் பேசியதை நினைவுப்படுத்துகிறேன் பள்ளியின் பணி வளம் பெற வாழ்த்துகிறேன் என தளபதி ஷபிகுர் ரஹ்மான் தனது உரையில் குறிப்பிட்டார் .ஆசிரியர் பாரி வரவேற்றார் துணை தலைமை ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார் பேரூராட்சி துணைத்தலைவர் ஹாஜா மைதின் ,தாஹா முகமத் மற்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1700 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

Saturday, January 9, 2010

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

 
தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.
ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.



பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.
தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.
தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.
1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.
அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..
அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!