இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Tuesday, January 26, 2010

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா
தளபதி ஷபிகுர்ரஹ்மான் பங்கேற்ப்பு!

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 61 வது குடியரசு தினவிழா 26.01.2010 அன்று சிறப்புடன் நடைபெற்றது

லால்பேட்டை பேரூராட்சி தலைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர் திலகம் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர்ரஹ்மான் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது

இந்தப் பள்ளியின் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆகியோருடன் மாணவர்களின் அழகார்ந்த அணிவகுப்பில் அடியேனும் பங்கேற்று அணிவகுப்பை பார்வையிட்டு நடந்து வந்தபோது 42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பள்ளியின் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்களுடன் என்.சி.சி.அணிவகுப்பில் தொண்டனாக நடந்து வந்த நிகழ்ச்சியை நினைத்து பார்த்து பூரிப்படைகிறேன்
என் தாய் மொழியான தமிழ் மொழியை என் நாட்டின் ஆட்சி மொழியாக்குங்கள் என்று அரசியல் நிர்ணயசபையில் எடுத்துரைத்து தமிழ் மொழியின் பற்றை வெளிபடுத்தினார் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்கள் இந்தப் பள்ளியில் நடைப்பெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு வாழ்த்தியுள்ளர்கள் அவரின் வாழ்த்தால் இந்தப்பள்ளி இன்றும் சிறந்து இயங்குகிறது நம்முடைய இந்தியத்திருநாடு அறிவியல் துறையிலும் தொழில் துறையிலும் சிறந்து இயங்குகிறது பொருளாதாரத்தில் நல்ல மேன்பாடுகளை பெற்று வருகிறது சமீபத்தில் பெங்களுருவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமத் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பேசும்போது நம்முடைய இந்தியத்திருநாடு 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் மிகப்பெரும் வளம் பெற்ற நாடாக அறிவியல் மற்றும் தொழில் துறையிலும் பொருளாதாரத்திலும் சிறப்பு பெற்ற வல்லரசு நாடாக திகழப்போகிறது என்று குறிப்பிட்டதை இங்கே சொல்லிக்காட்ட ஆசைப்படுகிறேன் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்திகொண்டிருக்கும் ஜனாப் சபியுல்லா மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளான ஏ.ஆர்.ரஷித் ,எம்.ஒ.அப்துல் அலி பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயதுல்லா ஆகியோரும் வருகைதந்திருந்தர்கள் அந்த மாநாட்டில் கல்வியின் அவசியம் பற்றி நம் தலைவர்கள் பேசியதை நினைவுப்படுத்துகிறேன் பள்ளியின் பணி வளம் பெற வாழ்த்துகிறேன் என தளபதி ஷபிகுர் ரஹ்மான் தனது உரையில் குறிப்பிட்டார் .ஆசிரியர் பாரி வரவேற்றார் துணை தலைமை ஆசிரியர் நாகராஜ் நன்றி கூறினார் பேரூராட்சி துணைத்தலைவர் ஹாஜா மைதின் ,தாஹா முகமத் மற்றும் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1700 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment