இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

எம்மைப்பற்றி

மௌலானா தளபதி A. ஷஃபிகுர் ரஹ்மான் மன்பஈ அவர்களின்

வாழ்க்கை குறிப்புகள்
பெயர் :-மௌலானா தளபதி A. ஷஃபிகுர் ரஹ்மான் மன்பஈ
பிறந்ததேதி:-13-11-1946, லால்பேட்டையில் பிறந்தார்.
பெற்றோர் :- மௌலானா அப்துல் முகனி பாகவி,

ஹாஜியா ஜொஹரத்துன்னிஸா

இவாின் தந்தை மௌலானா அப்துல் முகனி பாகவி தலைச்சிரந்த மார்க்க மேதையாகும்.
பாட்டனார்கள் இவாின் பாட்டனார் மௌலானா அப்துர் ரஹ்மான் நக்ஷபந்தீ

புனித மக்காவில் உள்ள ஃபக்கிய்யா உஸ்மானியா மார்க்கக் கல்லூாிஷயில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிாியராகப் பணியாற்றினார். இவாின் தாய் வழிப்பாட்டனார் முத்தவல்லி மௌலவி அப்துல.; பாஸித் லால்பேட்டை ஜhமிஆ மனபவுல் அன்வார் அரபிக்கல்லுயின் நாஜிராகவும் லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியாகவும் பணியாற்றினார்.



கல்வித்தகுதி 

லால்பேட்டை ஜெ.எம்.ஏ அரபிக்கல்லுாி அத்திக்கடை வி.கே. மத்ரஸாபொதக்குடி நு}ர்முஹம்மதிய்யா அரபிக்கல்லுரி, கிளியனு}ர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லுாிஆகியவற்றில் கல்வி பயின்றுள்ளார்.

1974 ஆம் ஆண்டில் லால்பேட்டை ஜெ.எம்.ஏ அரபிக்கல்லுாியில் மௌலவி ஆலிம் பட்டம் பெற்றhர்.

திருமணம்்

1977ம் ஆண்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தலைமையில் லால்பேட்டையில் இவாின் திருமணம் நடைப்பெற்றது.

மனைவி் ஹாஜியா மஹ்திய்யா

பிள்ளைகள்்

மௌலவி அல்ஹாஜ் அப்துல்ரஹ்மான் B.A..

அல்ஹாஜ் அஹ்மது B.B.A.

அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில்

சமுதாயச்சேவை்

இவர் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே லால்பேட்டையில் தன்னுடைய 12 வயதில் தென்னாற்க்;காடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சிறுவர் மாநாட்டை லால்பேட்டையிலும் ஆயங்குடியிலும் மிகச்சிறப்புடன் நடத்தியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பெருந்தலைவர் அரசியல் மேதை காயிதே மில்லத் அவர்களால் தளபதி என அன்புடன் அழைக்கப்பட்டார்.

அறிவுலக மேதை ஷைகுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் அவர்களால் சமுதாயப்பணியில் உற்ச்சாகப்படுத்தப்பட்டார். படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே 1969ஆம் ஆண்டில் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் இளைஞர் அணிச்செயலாளராகப் பணியாற்றினார்.

தென்னாற்க்காடு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக்கின் இளைஞரணி அமைப்பாளராக காயிதேமில்லத் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அரபிக்கல்லுயில் ஓதிக்கொண்டிருந்த காலத்திலேயே 400 க்கும் மேற்ப்பட்ட உலமாக்களை உறுப்பினராகப் பெற்றிருந்த. லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலாமா சபையில் செயலாளராகப் பணியாற்றினார்.

தென்னாற்க்காடு மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளராகவும் கௌரவச் செயலாளராகவும் மாநில ஜமாத்துல் உலமா சபையின் செயற்க்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். இன்றும் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு, செயற்க்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

லால்பேட்டை ஜhமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லு}ரியிலும் தொடர்ந்துப் பல்லாண்டுகள் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக சேவையாற்றியுள்ளார். லால்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியின் பெற்றேhர் ஆசிரியர் சங்கம், லால்பேட்டை முபாரக் மஸ்ஜித் முபாரக் பெண்கள் அரபிக்கல்லுாி ஆகியவற்றில் நிர்வாக குழுவில் சிறப்புடன் சேவையாற்றி வருகிறார்.

இவாpன் சின்னஞ்சிறு வயதிலேயே ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம், முஸ்லீம் சிறுவர் சங்கம், காயிதேமில்லத் நற்பணி மன்றம் ஆகியவற்றில் செயலாளராக இருந்து தன்வயதுக்கு ஏற்ற சிறுவர்களையெல்லாம் வைத்து அதிகாலையில் வீடுகள் தோறும் சென்று தொழுகைக்கு அழைக்கும் பணியைச் செய்துள்ளார்.

1993 ல் சிதம்பரம் நகரில் நடைப்பெற்ற சிதம்பரம் வட்டார இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாடு இவாின் தலைமையில் நடைப்பெற்றது. சிராஜூல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப், ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் சாஹிப், பன்னுல் ஆசிரியர் ரிபாயி சாஹிப், முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் சாஹிப் இம்மாநாட்டில் பங்கேற்று இவாpன் சேவையை பொpதும் பாராட்டினார்கள் தப்லீக் ஜமாஅத்தின் திருப்பணிகளிலும் சிறப்பாக சேவையாற்றிவருகிறார்.

இவாின் சின்ன வயதில் தஞ்சை மாவட்டம் தத்துவாஞ்சோியில் 1967ம் ஆண்டில் நடைப்பெற்ற நபிகள் பெருமானார் பிறந்த தினவிழாவில் அன்றைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா பங்கேற்றார். அப்போது அந்த மீலாத் விழாவில் உரை நிகழ்த்திய இவாின் உரையை அண்ணா பொpதும் பாராட்டினார். தத்துவாஞ்சோியில் பள்ளிவாசல் திறப்பு விழா மலாிலும் இச்செய்தி பதியப்பட்டிருக்கிறது.

1988ம் ஆண்டில் திண்டுக்கல்லில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைப்பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிராஜூல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் தலைமையில் மறுமலர்ச்சி ஆசியர், நாவலர் A.ஆ. யூசுப் சாஹிப் பொதுச் செயலாளராக இருந்தபோது துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். இன்றும் முனீருல் மில்லத் பேராசிhpயர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் தலைமையில் மாநில மார்க்க அணிச் செயலாளராகப் பணியாற்றிவருகிறhர்.

1977ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜஜப்பயணம் சென்று வருகிறhர்.

மாண்புமிகு மதீனாவிலும் மதீனா முஅல்லிம் ஷெய்கு முஹம்மது முஸ்தபா ஜெயஃ;த்தூனி ஷெய்கு, ஷெய்கு; ஹஸன் ஜெய்த்தூனி இவர்களின் ஹஜ்சேவை நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

மணிவிளக்கு, மறுமலர்ச்சி, உரிமைக்குரல், பிறை, தாருல் குர்ஆன், அறமுரசு, குா்ஆனின் குரல், சரவிளக்கு, இளைய சமுதாயம, பசுங் கதிர், பிறைக்கொடி, மணிச்சுடர், நாளிதாழ், ஆகிய இதழ்களிலும் கட்டுரை எழுதியுள்ளார். மலர்களிலும் தொடர்ந்து கட்டுரை எழுதியுள்ளார், எழுதிவருகிறார்.

மிலாத்மலர், பெருநாள் மலர், திருக்குர்ஆன் மாநாட்டு மலா,; கல்வி மலர், பள்ளிவாசல் திறப்பு, அரபிக்கல்லு பட்டமளிப்பு விழா, இவைகளில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறhர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நிகழ்வுகளிலும் துவக்க காலத்திலிருந்து தொடர்ந்து கலந்துக் கொண்டு சேவையாற்றி வருகிறார்.


வெளிநாட்டுப்பயணம்
சவூதி அரபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்தாத், கர்பால, நஜஃப், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் நடைப்பெற்ற சன்மார்க்க நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.