இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Sunday, March 25, 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றுத்தந்தது தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றி விழா மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உணர்ச்சி உரை

முஸ்லிம்களுக்கான உரிமைகள் அனைத்திற்கும் அரசியல் சட்டப் பாதுகாப்பு கேடயத்தை பெற்றுத் தந்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய கடமை சமுதாயத் தைச் சார்ந்தது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

சென்னை எழும்பூர் இம் பீரியல் ஹோட்டல் சிராஜ் அரங்கத்தில் மார்ச் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் தலைவர் பேராசிரியர் ஆற்றிய உணர்ச்சி உரை வருமாறு-

இம் மாபெரும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய அனைவருமே மிகத் தெளிவாக விளக்கமாக, உணர்ச்சிமயமாக உரை நிகழ்த் தினார்கள். சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் மனதிலே பதிய வைத்து முஸ்லிம் லீகினர் ஒவ்வொரு வரும் செயல்படுத்துவார் களேயானால் அது வருங்கால சமுதாயத்திற்கு மிகப் பெரும் பயனளிக்கும். அதுவே இந்த மாநாட்டின் வெற்றியாகும்.

கமுதி பஷீர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளர் களில் ஒருவராக கமுதி பஷீர் அவர்களை அறிவித்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கி ணைப்பு பொறுப்பை அளித் தோம். அதன் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கி ணைப்பு நிகழ்ச்சியை நடத்துவதாக சொல்லி அதனை 65-வது நிறுவன தின விழாவாக நடத்து வதாக ஏற்பாடு செய்து பின்னர், இந்திய தேர்தல் ஆணையம் நம்மை அங்கீகரித்த செய்தி வந்ததும், அதன் வெற்றி விழா வையும் சேர்த்து நடத்துகிறோம் எனச் சொல்லி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நான்கு அணிகளின் வளர்ச் சிக்கான கருத்தரங்கையும் இணைத்து ஒருமிகப் பெரிய விழாவாக மாநாடாக நடத்திக் காட்டியிருக்கிறார். இந்த அளவிற்கு இந் நிகழ்ச்சியை உயர்த்திய தம்பி கமுதி பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்க ளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் மூன்று வகையானவர்கள் இருக்கிறார்கள். ஒன்று, காயிதெ மில்லத் அவர்களுக்கு முந்தைய காலத்திலிருந்து முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டவர்கள். அதில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய மிகச் சிலர்தான் இருப்பார்கள்.

இரண்டாவது, கமுதி பஷீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை போல் லட்சிய நோக்கத்தோடு, முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொண்டு அதற்காக உழைக்க முன்வந்திருக்கக் கூடிய இளைஞர்கள்.

மூன்றாவது, முஸ்லிம் லீக் என்கின்ற பேரியக்கம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து அதற்காக உதவி செய்யக் கூடியவர்கள். என் அருகா மையில் அமர்ந்திருக்கக்கூடிய விருதுநகர் ஹோட்டல் இப்ரா ஹீம் ஷாவை போன்றவர்கள்.

பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்

நம்முடைய இயக்கத்திற்கு மாநில பொதுச் செயலாளராக தம்பி கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருக் கிறார். பல நேரங்களில் அவர் இதை விட்டு ஒடி விடுவார் என நினைத்தேன். ஆனால் எல்லா பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு சமாளித்து இங்கே பணியாற்றுகிறார். இதுபோன்ற இளைஞர்கள் நமக்கு நிறைய தேவை.

லட்சிய வெறியோடு செய லாற்ற முன்வரக்கூடிய அப்படிப் பட்ட இளைஞர்களை பெரியவர் கள் அரவணைத்து அன்போடு வழிகாட்டி அவர்களை ஊக்கப் படுத்தி உற்சாகப்படுத்த வேண் டும். இல்லையேல் வரக் கூடிய இளைஞர்கள் சென்று விடுவார் கள். நான் மூன்றாவதாக குறிப் பிட்ட சமுதாயப் புரவலர்கள் அனைத்து தரப்பிலும் இருக்கி றார்கள். அவர்களையெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது சந்தித்து கலந்து பேசி, முஸ்லிம் லீக் பணிகளுக்கு அவர்களு டைய ஈடுபாட்டைப் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும். தாய்ச்சபையின் நிகழ்ச்சிகளில் அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

`ஏணி� சின்னம்

இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக் கப்பட்டு `ஏணி� சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தந்தாலும் இப்போதுதான் நம் தலை மீது ஒரு மிகப் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும். ஏனெனில், இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கும்போது அந்த கட்சியை சார்ந்தவர்கள் கடுமையாக உழைப்பார்கள். நம்முடைய சின்னத்தில் நிற்கும் போது அது கூட்டணி கட்சி என்ற அளவிலேயே பார்க்கப்படும். எனவே, நமக்கு அதிகமான உழைப்பு தேவை. இதற்காக நாம் 10 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும். இப்போது இருக்கக்கூடிய உறுப்பினர்களையும், கிளை களையும் ஒன்றை பத்தாக்கக் கூடிய வகையில் நாம் செயல்பட வேண்டும். அப்போதுதான் நம் சின்னம் எல்லா இடங்களிலும் அறிமுகமாகி வெற்றி இலக்கு நமக்கு கிட்டும்.

இ.அஹமது சாதனை

ஒரு காலத்தில் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கொண்டு கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன், பிரதமராக இருந்த நேரு, முதல்வராக இருந்த ராஜாஜி போன்றோரெல்லாம் கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை அழைத்து, முஸ்லிம் லீகை கலைக்கவில்லையா? என்று கேட்ட காலமாக இருந்தது.

இந்தக் காலம் கவர்னர் மாளிகையில் அமர்ந்து இன்றைய பிரதமரோ, முதல் வரோ இ.அஹமது சாஹிபை அழைத்து முஸ்லிம் லீகை வளர்க்கவில்லையா என்று கேட்கும் காலமாக மாறியுள்ளது.

இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சர்வதேச அளவில் புகழ்பெறக்கூடிய ஒரு அமைப்பாக மாற்றிய பெருமை நம் தேசியத் தலைவர் இ. அஹமது அவர்களையே சாரும். அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் வெளிநாடுகளுக்குச்செல்லும் போதெல்லாம் மத்திய அமைச்சர் என்ற முறையோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறார். அது நமக்கு கிடைத்த பெருமை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தெரிகிறதோ, இல்லையோ, இ.அஹமதை சர்வ தேச அளவில் அனைவருக்கும் தெரியும். கட்சி மூலம் ஆட்கள் பிரபலமா வது ஒரு முறை - ஆள் மூலம் கட்சி பிரபலமாவது மற்றொரு முறை. நபிகள் மூலம் இஸ்லாம் பிரபலமானது. இஸ்லாம் மூலம் நாம் பிரபலமா கிறோம்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., - வி. ஜீவகிரிதரன்

நான் இன்றைய நிகழ்ச்சி யில், மூன்று விஷயங்களை சுட்டிக் காட்ட கடமைப்பட் டுள்ளேன்.

ஒன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகரிக்கப் படுவதற்கும், `ஏணி� சின்னம் கிடைப்பதற்கும் மிகப் பெரிய அளவில் முயற்சி மேற்கொண்ட வர்கள் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவருக்குள்ள தனிச் சிறப்பு ஐக்கிய அரபு அமீகரத்தில் அவர் பணியாற்றிய காலம் முதல் உலகில் அதிகாரிகளிடம் நல்ல தொடர்புகளை வைத்திருக்கக் கூடியவர். அனைவரிடமும் நெருங்கிப் பழகக் கூடிய நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டவர். அந்தத் திறமை இப்போது பயன்பட்டிருக்கிறது. அவர் செய்தது மிகப் பெரிய காரியம். அடுத்தது நம்முடைய மாநிலச் செயலாளர் வெ. ஜீவகிரிதரன். வழக்கறிஞரான அவர் நம்முடைய இயக்கத் திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். அவருக்கு நன்றிதான் சொல்ல முடியும். நீங்கள் நல்லா இருக்கணும் என்று வாழ்த்துகிறேன்.

இரண்டாவது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில நிர்வாகிகளுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட் டுள்ளோம். கடைசி நிமிடம் வரை அவர்களுக்கு சந்தேகம் இருந்தது. இணைப்பு என்று ஏற்பட்டுவிட்டால் `சின்னம்� கிடைக்குமா என்று.

ஆனால் முதல் முறையாக இணைப்பு ஏற்பட்டு சின்னமும் கிடைத்துள்ளது.

அடுத்து இரவு பகலாக இருந்து பாடுபட்ட இ.அஹமது சாஹிப். அவர்சாதாரண மனிதர் அல்ல. ஒரு மிகப் பெரிய சாதனையாளர். அவர் செய்தது இமாமய சாதனை. அவரை பாராட்டுவது நம்முடைய கடமை.

சமுதாயத்திற்கு பாதுகாப்பு கேடயம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாட்டில் இருந்தே தீர வேண்டும். அதை வளர்த்தே ஆக வேண்டும். இது ஒரு ஜன நாயக நாடு. இங்கே முஸ்லிம்கள் சிறுபான்மையின ராக வாழு கின்றார்கள். சிறு பான்மை யின சமுதாயத்தில் பெரும்பான் மையாக நாம் உள்ளோம். நம்முடைய உரிமைகள் அனைத் தும் காப்பாற்றப்பட வேண்டும்.

இந்திய முஸ்லிம்களின் அனைத்து உரிமைகளையும் ஷரீஅத், மஸ்ஜித், மதரஸா, திருமணம், வாழ்வு - மரணம் என முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களி லும் அரசியல் சாசனத்தில் சட்டரீதி யான பாதுகாப்பு கேடயத்தை முஸ்லிம்களுக்கு பெற்றுத் தந்த இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான்.

ஒரு தாய்க்குத்தான் தெரி யும். பெற்ற பிள்ளையை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. உரிமைகளை பெற்றுத் தந்தோம். அதைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த வகையில், சமுதாய கேடயமாக இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய கடமை நம்முடைய சமுதாயத்திற்கு உண்டு.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment