இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Saturday, November 7, 2009

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்



கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் அக்டோபர் 18 ஞாயிற் றுக்கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர்.

லால்பேட்டை சிதம் பரம் மெயின் ரோட்டில் சிராஜுல் மில்லத் நினை வரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.ஜி. முஹம்மது தலைமை தாங்கினார். இளைஞரணி துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார். கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஏ. அமானுல்லா வரவேற்று பேசினார்.

மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கபார் துவக்கவுரை நிகழ்த்தினார். நகர ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள், முத்தவல்லி கள் முன்னிலை வகித்தனர். மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீத் ஜான், மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், திருவாரூர் மாவட் டச் செயலாளர் எம்.எம். ஜலாலுதீன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

லால்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் சல்மான் பாரிஸ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பிரைமரி களின் நிர்வாகிகள், இளை ஞர் அணியினர், ஜமாஅத் பிரமுகர்கள், உலமாக்கள் ஏராளமானோர் பங்கேற்ற னர்.

உலமாக்கள் சந்திப்பு
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ், மவ்லானா அப்துர் ரஹ்மான் ஹஸரத், கட லூர் மாவட்ட ஜமாஅத் துல் உலமா சபை தலைவ ரும், லால்பேட்டை ஜே. எம்.ஏ. அரபிக் கல்லூரி முதல்வருமான மவ்லானா ஏ. நூருல் அமீன் ஹஸரத், நெல்லிக்குப்பம் மவ்லானா அப்துல் ரஸாக், மலேசிய பினாங்கு மதரஸாவின் பேராசிரியர் மவ்லானா ஹம்மாது மதனி, மவ் லானா சையத் அஹமது, மவ்லானா நூருல் அமீன், மவ்லானா அபுல் கலாம் உள்ளிட்ட உலமா பெரு மக்களை மாநில பொதுச் செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பி னரும் சந்தித்து பேசினர்.

கொடியேற்று விழா
லால்பேட்டை நகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் அருகிலும், புது பஜார், காயிதெ மில்லத் சாலை, ஏரிக்கரை மெயின் ரோடு, பஸ் நிலையம் அருகில், மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் பச்சிளம் பிறைக்கொடிகளை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபு பக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஏ.ஆர். அப்துர் ரஷீத் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் ஏ. சுக்கூர், துணைச் செய லாளர்கள் லால்பேட்டை அமானுல்லா, விருத்தா சலம் லியாகத் அலி, நெல் லிக்குப்பம் ராஜா ரஹி முல்லா, மங்களம் பேட்டை அப்துல் ரஹ் மான், லால்பேட்டை நகர துணைத் தலைவர் எம்.ஓ. அப்துல் அலி, பி.எம். முஹம்மது தயீப், பி.எம். மஸ்ஊது, காட்டுமன்னார் குடி முஹம்மது கவுஸ், விருத்தாசலம் அப்துல் மஜீத் உள்ளிட்ட ஏராமா னோர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இமாம் கஸ்ஸாலி மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
லால்பேட்டை வருகை தந்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. முஹம் மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந் நகரில் உள்ள இமாம் கஸ்ஸாலி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றனர்.

லால்பேட்டை லால் கான் தோப்பு கல்வி வளா கத்தில் ஏ.ஆர். பஸ{லுத்தீன் நினைவரங்கில் நடை பெற்ற இவ் விழாவிற்கு நகர முஸ்லிம் பட்டதாரி கள் சங்கத்தின் தலைவர் எஸ். எஸ். ஜாபர் அலி தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.ஏ. முஹம்மது ஜக்கரியா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் ஹாரிஸ் அஹமது ஆண்டறிக்கை வாசித்தார்.

மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான், கவிஞர் பி.எம். நசீர் அஹமது, எம்.ஏ. ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.எ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகி யோர் சிறப்புரையாற்றி னர். பள்ளி முதல்வர் மாரியப் பன் நன்றி கூறினார்.

மாவட்ட முஸ்லிம் லீக் கலந்துரையாடல்
லால்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகையில் கடலூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அபுபக்கர், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் கூட் டம் முடிந்த பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எச். முஹம்மது ஆஸிப் இல் லத்திற்கு சென்று நலம் விசாரித்தனர்

அதனைத் தொடர்ந்து லால்பேட்டை ஜே.எம்.ஏ. கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.ஏ. அப் துல் அஹது இல்லத்திற்கு சென்று காலம் சென்ற அவரது மாமியாரின் மஃபி ரத்துக்கு துஆ செய்தனர்.

முன்னதாக, லால் பேட்டை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துல் ரஹ் மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் ஆகியோருக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment