இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Saturday, November 7, 2009

காயிதெ மில்லத் நினைவிடத்தில் தளபதி ஷபீகுர் ரஹ்மான் உருக்கம்



இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத்துடன் என்னுடைய சின்னஞ்சிறு வயதிலிருந்தே தொண்ட னாக பணியாற்றி இருக்கி றேன். காயிதெ மில்லத்தால் ஹதளபதி என்று அன்புடன் அழைக்கப்பட்டேன்.

காயிதெ மில்லத் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, லால் பேட்டை நகர முஸ்லிம் லீக் முதுபெரும் தலைவர் தா. அப்துல் ஹலீமுடன் காயிதெ மில்லத்தை பார்க்க சென்றிருந்தேன்.

தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த காயிதெ மில்லத்தை பார்ப் பதற்கு நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்க ளும், தோழமைக் கட்சி களின் தலைவர்களும் பார்க்க வந்திருந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பெருந் தலைவர்களில் ஒருவரான சங்கைமிகு அப்துர் ரஹ்மான் ஃபாபகி தங்ங ளும் காயிதெ மில்லத்தை பார்க்க வந்தார். காயிதெ மில்லத் ஃபாபக்கி தங்ஙள் சில அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து ஓதச் சொன்னார்.

குர்ஆன் ஷரீப் சூராக் களை ஓதி வந்தேன். மரண நிலையில், சகராத் நிலையி லிருந்த காயிதெ மில் லத்தை நோக்கி வந்தேன். அப்போது காயிதெ மில்லத்தை பார்ப்பதற்கு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் வந்தி ருந்தார்.

காயிதெ மில்லத் கரத்தை பிடித்து கண்ணீர் வடித்து கலைஞர் அழுத காட்சியை கண்டு நாங்க ளெல்லாம் அழுதோம்.

சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அன்றைய கேரள கல்வி அமைச்சர் சி.எச். முஹம்மது கோயா மற்றும் முஸ்லிம் லீக் முன்னோடி தலைவர்களும் உடனிருந்தார்கள். காயிதெ மில்லத் மறைவெய்திய நேரத்தில் அவர்களுடனிருந்து அவர் களுக்கு கஃபனிடும் போது நான் தலைப்பாகை கட்டி அணிவித்தேன். அந்த காட்சியை கண்ட காயிதெ மில்லத் மகன் மியாகான் லால்பேட்டை பட்ட மளிப்பு விழாவுக்கு தலைப் பாகை கட்டும் நிகழ்ச் சிக்கு காயிதெ மில்லத்தை அழைத்துச் செல்வீர்கள். இன்று நீங்கள் தலைப் பாகை கட்டினீர்கள் என்று கூறினார். இந்த காட்சி என் நெஞ்சை நெகிழ வைத்தது.

இன்று காயிதெ மில்லத் மண்ணறையில் காயிதெ மில்லத்துக்கு யாசீன் ஓதி துஆ செய்தபோது, தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலினும், காயிதெ மில்லத் கட்டிக் காத்த முஸ்லிம் லீகை பாதுகாத்து வளர்த்து வரும் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மற்றும் அமைச் சர்களும், முஸ்லிம் லீக் முன்னோடிகளும், காயிதெ மில்லத்தின் கப்ரின் அருகில் இருந்து ஜியாரத் நிகழ்ச்சி யில் கலந்துகொண்டது எங்களின் நெஞ்சை நெகிழ வைத்தது.

காயிதெ மில்லத் கப்ரை அல்லாஹ் பிரகாச மாக்கி வைப்பானாக.

No comments:

Post a Comment