பில்லூரில் மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் பங்கேற்ப்பு
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகில் உள்ள பில்லூரில் ஏ.எம்.எச்.நகரில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மஸ்ஜித் ரஹிமா புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது விழாவுக்கு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ.கே.ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவரும் பில்லூர் ரஹிமா மஸ்ஜித் தலைவருமான ஏ.எம். ஹனீஃபா ஹாஜியார் வரவேற்றார் அவ்வமையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்கஅணி செயலாளர் மொளலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டி துஆ செய்தார்
மங்கலம்பேட்டை நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.ஏ.சர்தார் நன்றி கூறினர் விழாவில் மாவட்ட மார்க்க அணி துணைசெயலாளர் மௌலான நூருல் அமின் மற்றும் பக்கிர் முகமத் ,சபீர் ,முகமத் யுஸுப் ,மிரான்,ஷெரிப்,லால்பேட்டை சல்மான் பாரிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment