கண்ணியமிகு காயிதே மில்லத்
மௌலவி தளபதி ஏ.ஷஃபிகுர்ரஹ்மான்
தமிழ்நாடு மாநில மார்க்க அணிச்செயலாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தஞ்சை மாவட்டம் வழுத்தூர் எனும் எழுத்தூரில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்சி முகாமில் அடியேன் பங்கேற்திட இயலாவிட்டாலும். புனித ஹஜ்ஜை நிறைவேற்றிட வந்த அடியேன் புனித ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி புனிதமிகு கஃபத்துல்லாஹ் ஷரீபிலும் மாண்புமிகு மதீனா முனவ்வராவின் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்லா ஷரீபிலும் துஆச்செய்து இந்த வாசகத்தை எழுதி அனுப்பி இருக்கிறேன். பேச்சாளர் பயிற்சி முகாம் சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புனித ஸ்தாபனத்தை மேலும் வலிமைப்பெறச்செய்து பிரகாஸத்துடன் திகழ துஆச்செய்து வாழ்த்துகிறேன் அல்ஹம்து லில்லாஹ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தனிப்பெறும் தலைவராக திகழ்ந்த கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் பற்றி சொல்லிக்காட்டுவதிலும் சுட்டிக்காட்டுவதிலும் பெரும் மகிழ்வெய்துகிறேன்.
இளமை பருவம்
காயிதே மில்லத்அவர்கள் தனது இளமை பருவத்தில் திருநெல்வேலிபேட்டையில் பால்ய சங்கம் ஒன்றை நிருவி அதன் மூலம் சிறுவயதிலேயே மகத்தான சேவையாற்றியுள்ளார்கள்.கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலயே சுகந்திர போரட்டத்தில் பங்கேற்று தியாக மிகுந்த சேவையாற்றியுள்ளார்கள். கல்லூரிகளில் பட்டபடிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அன்னியர்களான வெள்ளையர்கள் நம் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிரித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் கல்லுரிகளை விட்டு வெளியேற வேண்டுமென்று காந்திஜீ அவர்கள் வேண்டு கோள்விட்டபோது கல்லுரி படிப்பை பாதியிலயே உதரி தள்ளிவிட்டு கல்லூரியை விட்டு காயிதேமில்லத் வெளியேரினார்கள் இது சரித்திர செய்தியாகும்.
அரசியலில்
முஸ்லிம் லீக்கின் சென்னை மாகானத் தலைவராக இருந்து மகத்தான பணியாற்றியுள்ளார்கள் தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து அரசு சரியாக செயல்பட அலோசனை வழங்கியுள்ளார்கள். அரசின் செயல்பாடுகளில் குறைபாடுகளை காணும்போது கடுமையாக எதிர்த்துள்ளார்கள். சென்னை மாகான சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றிய காயிதேமில்லத் அவர்களின் செயல்பாடுகளையும் அரிவார்ந்த அரசியல் ஆலோசனைகளையும், இன்றும் அரசியல் மேதைகள் பாராட்டுகிறார்கள்.
நாம் நாட்டு நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் அவர்கள் மிக அற்புதமாக செயல் பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்திற்க்கு எதிராகவும், முஸ்லிம் தகுதி உயிரினும் மேலான ஷரீஅத்து சட்டத்தை எதிர்த்து சில நாடாளுமன்ற உறுப்பினார்கள் பேசியபோது அவர்களின் பேச்சை கடுமையாக எதிரித்துள்ளார்கள், எங்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தில் தலை இடாதீர்கள் எங்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்யாதீர்கள் என்று நாடாளமன்றத்தில் பேசியுள்ளார்கள்.
இரும்பு மனிதரையே எதிர்த்த ஈமானின் உறுதி மிக்க தலைவர்
நம்நாட்டின் நடாளுமன்றத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் சலுகைகளை கேட்கவில்லை. நம் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருஜீ அவர்களுக்கும் உள்துரை அமைச்சர் சர்தார் பட்டேல்ஜீ அவர்களுக்கும் எந்த உரிமை இருக்கிறதோ, அந்த உரிமை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமிற்க்கும் இருக்கிறது. அந்த உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று காயிதே மில்லத் சொல்லியுள்ளார்கள். நடாளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமையைப்பற்றி காயிதேமில்லத் பேசியபோது முஸ்லிம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்று இரும்பு மனிதரான பட்டேல்ஜீ அவர்கள் சொல்லியபோது இந்த நாட்டில் வாழும் ஒரு கொசுவைக்கூட வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட்ட வேண்டும் என்று சொல்லுவதர்க்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எந்த வகையிலும் எந்த நிலையிலும் முஸ்லிம்களாகிய எங்களை எங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் வெளியேர வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் உங்களுக்கு இல்லை என்று இரும்பு மனிதரான பட்டேல்ஜீ அவர்களை பார்த்து நேருக்கு நேர் உறுதியுடன் எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தார் ஈமானின் உறுதியை காயிதேமில்லத் அவர்கள் நம் நாட்டு நாடளு மன்றத்தில் வெளிப்படுத்தினார். நம் நாட்டு அரசியல் நிர்ணயச்சபையில் என் தாய்மொழியான தமிழ்மொழியை நம் நாட்டு ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று அரசியல் நிர்ணயச்சபையிலயே முழங்கியவர்கள் காயிதேமில்லத் அவர்களாகும்.
முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாகராகவும் தமிழகத் தலைவராகவும் சிறப்புடன் செயல்பட்டு வரும் நம் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகதீன் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் என்னை டெல்லிக்கு அழைச்துச் சென்றிருத்தார்கள். அப்போது நாடாளுமன்றத்தின் வளாகத்தில் தலைவர் பேராசிரியர் தே.எம்.கே. அவர்களுடன் அடியேன் நடந்துச் சென்றபோது காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடந்த ஒவ்வொரு நாளும் முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளைப்பற்றி பேசியுள்ளார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெயரை பதிவு செய்துள்ளார்கள். அதைப்போன்று முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களும் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப் அவர்களும் சிறப்பாக சேவையாற்றியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியுள்ள சேவை மிக மகத்தானதாகும் என்று தலைவர் பேராசிரியர் அவர்கள் சொன்னச் செய்தி என்னை நெகிழவைத்தது. கேரள மாநிலத்திலிருந்து 3 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பட்ட காயிதே மில்லத் அவர்கள் வியக்க தக்க சேவையாற்றியுள்ளார்கள். தொகுதிக்கே செல்லாமல் பல்லாயிரக்கணக்கான வாக்குவித்தியாசத்தில் வெற்றிவாகைச் சூடிய காயிதே மில்லத் அவர்கள் அரசியல் உலகிலும் சமுதாய, சன்மார்க்க பணியிலும் தியாக மிகுந்த சேவையாற்றியுள்ளார்கள்.
இளைஞர்களிடம் காயிதே மில்லத் அன்பு
இளைஞராக இருந்த சிராஜீல் மில்லத் அப்துல்ஸ்ஸமத் சாஹிப் அவர்களை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கி அழகுப்பார்த்தவர்கள் 1967-1971 நடைப்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிப் பெறச்செய்தவர்கள் காயிதே மில்லத் அவர்களாகும்.
அதேபோல் இன்று தலைவர் பேராசியர் முனீருல் மில்லத் அவர்களும் இளைஞர்களை முன்னிலைப் படுத்தும் வகையில் அனைத்துலக காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஜனாப் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை முன்னிலைப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தாய்ச்சபை சார்பாக அனுப்பியுள்ளார்கள்.
1958 ம் ஆண்டு ஜீன் மாதம் 6, 7 தேதிகளில் லால்பேட்டை திப்பு சுல்தான் நகரில் காயிதே மில்லத் தலமையில் மாபெறும் மாநாடு நடைப்பெற்றது அப்போது 12 வயது சிறுவனாக இருந்த அடியேனும் என்வயதுடைய சிறுவர்களும் மாநாட்டின் தொண்டர்களாக பணியாற்றினோம் அந்த மாநாட்டில் எனக்கு மேடையில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தேனீர் கொடுப்பது விசிரிவிடுவது ”அப்போது எங்கள் ஊரில் சரியான மின்சாரம் கிடையாது அதனால் மேடையில் ஃபேன் போடவில்லை. அப்போது காயிதே மில்லத் அவர்களுக்கு விசிரிமட்டையை எடுத்து விசிரி விட சென்றேன். அப்போது என்ளை காயிதே மில்லத் அவர்கள் அன்புடன் அருகில் உட்காரவைத்து விசிரி மட்டையை என்னிடமிருந்து வாங்கி கொண்டார்கள்.
மேடைக்கு எதிறே வீற்றிருந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர் திலகங்களை சுட்டிக் காட்டி அவர்களே கடும் வெயிலையும் பொறுட்படுத்தாமல் நாள் முழுக்க மாநாட்டு பந்தலில் வீற்றிருக்கும் போது நாமும் அப்படியே இருப்போம் என்று காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியில் லால்பேட்டை நகரில் என் சிறு வயதுக்கு ஒத்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களெல்லாம் தென்னாற்க்காடு மாவட்ட முஸ்லீம் லீக் சிறுவர் மாநாட்டை மிகச் சிறப்புடன் நடத்தினோம். கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட தென்னாற்க்காடு மாவட்ட முஸ்லீம் லீக் மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது. அறிவுலக மேதை ஷைகுல் மில்லத், அமானி ஹஜ்ரத் அன்றைய லால்பேட்டை நகர முஸ்லீம் லீக் தலைவர் முத்தவல்லி அப்துல் பாசித் அன்றைய மாவட்ட கன்வினர் ஊழியர் திலகம் நெல்லிக்குப்பம், சயித் சாஹிப், மௌலவி முகமது இக்லில், டி.எம். அப்துல் ஹலிம் மௌலவி, எஸ்.ஏ. அப்துல் ஹக் ஆகியோரின் அற்புதமான வழிக்காட்டுதலில் மாநாட்டை மிகச்சிறப்புடன் நடத்தினோம்.
மாநாட்டை வாழ்த்தி சின்னஞ்சிறு வயதினரான எங்களை வாழ்த்தியும், நன்றி தெரிவித்தும், காயிதே மில்லத் தபால் எழுதியிருந்தார்கள். இந்த மாநாடு முடிந்து இரண்டொரு மாதத்தில் நடைபெற்ற லால்பேட்டை ஜாமீஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த காயிதே மில்லத் அவர்கள் லால்பேட்டை நகர முஸ்லீம் லீக் தலைவராகவும் ஜாமீஆ மன்பவுல் அன்வார் நாஜிராகவும் பணியாற்றிய என் பாட்டனார் முத்தவல்லி மௌலவி அப்துல் பாசித் அவர்களிடத்தில் சொல்லி மாநாடு நடத்தியவர்களை வரச்சொல்லுங்கள் அடியேனும் பி.எம். முகமது தாவூஸ், டி.எஸ். முகமது அலி, எஸ்.என். அபுல் ஹசன், பி.இஜட். முஹமது மற்றும் சிறுவர்களும் சென்றோம். அப்போது காயிதே மில்லத் அருகில் அறிவுலக மேதை அல்லாமா அமானி ஹஜ்ரத் மறுமலர்ச்சி ஆசிரியர் நாவலர் யூசுப் சாஹிப் மற்றும் முஸ்லீம் லீக்கின் முன்னோடிகள் உடன் இருந்தனர். சிறுவர்களான எங்களின் தொன்டை பாராட்டி துஆ செய்தார்கள். அன்று மாலையில் லால்பேட்டை நகரில் நடைபெற்ற மாபெரும் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டத்தில் எங்களை அழைத்து காயிதே மில்லத் பேச வைத்தார்கள். காயிதே மில்லத் அவர்கள் பேசும் போது எங்களின் பேச்சை பாராட்டி பேசினார்கள். அதுதான் இன்றும் எங்களை முஸ்லீம் லீக்கில் தொன்டாற்ற வைத்துள்ளது.
சிறுவர்களை அப்புறப்படுத்தாதீர்கள்
1968ம் ஆண்டில் லால்பேட்டை புதுபஜாரில் மாபெரும் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டம் துவங்கும் முன்பே பன்னூற்றுக் கணக்கான சிறுவர்கள் மேடையின் எதிரே உட்கார்ந்திருந்தார்கள். காயிதே மில்லத் அவர்களும், சிராஜீல் மில்லத், அப்துஸ்ஸமத் சாஹிப் அரசியல் ஞானி பக்கர் அண்ணன் மற்றும் முன்னோடிகள் மேடைக்கு வந்ததும் கூட்டம் பல்லாயிரக்கணக்கில் கூடிவிட்டது. மேடைக்கு அருகே உட்கார்ந்திருந்த சிறுவர்களை ஊழியர்கள் அப்புரப்படுத்தினார்கள். சிறுவர்களை அப்புரப்படுத்தாதீர்கள் இந்த கூட்டத்திற்கு அவர்கள் தான் முதலில் வந்துள்ளார்கள்.
இங்கே பேசப்படும் பேச்சுக்கள் இந்த சிறுவர்களுக்கு புரியவில்லை என்றாலும் அல்லாஹ், ரசூல், முஸ்லீம், முஸ்லீம் லீக் வார்த்தை அவர்களின் காதுகலில் விழுந்து கல்பில் பதிந்தால் போதும் என்று காயிதே மில்லத் சொன்னார்கள்.
அல்லாஹீ அக்பர் கோஸத்தையே முழங்குங்கள்
புனித மிகு மஸ்ஜித் அக்ஸாவின் ஒரு பகுதியை யூதவெறியர்கள் இஸ்ரேல் காரர்கள் தீயிட்டு கொளுத்திய போது இஸ்ரேலை கண்டித்து நாடெங்கும் முஸ்லீம் லீக் சார்பில் கண்டன கூட்டங்கள் நடைபெற்றது. காயிதே மில்லத் அவர்களே தலைமை ஏற்று நடத்தினார்கள். அப்போது சிதம்பரம் நகரில் மாபெறும் கண்டன கூட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் நாங்கள் எல்லாம் மஸ்ஜித் அக்ஸாவை தீயிட்டு கொலுத்திய இஸ்ரேல் ஒழிக அவர்களை ஆதரிக்கும் அமெரிக்கா ஒழிக என்று நாங்கள் கோஷமிட்டபோது யாரையும் ஒழிக என்று கோஷம் போடாதீர்கள்.
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் என தக்பீர் முழங்குங்கள். அல்லாஹூ அக்பர் தக்பீர் முழங்குவதால் நமக்கு எதிரான சக்திகள் தானாக ஒழிந்துவிடும் என்று காயிதே மில்லத் சொன்னது இன்னும் எங்கள் நெஞ்சை நெகிழ வைக்கிறது.
புனித ஹஜ்ஜில் காயிதே மில்லத்
புனித ஹஜ்ஜீக்கு சென்றிருந்த காயிதே மில்லத் அவர்கள் புனித ஹஜ்ஜீல் புனித மக்காவிலும் மாண்புமிகு மதினாவிலும் காயிதே மில்லத் செய்த நல் அமல்கள்அவர்களின் பணிவான அன்பார்ந்த செயல்பாடுகளை பற்றி இன்றும் எல்லோரும் நினைவுக் கூறுகிறார்கள்.
காயிதே மில்லத் அவர்களுடன் ஹஜ்ஜீக்கு சென்றிருந்தவர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர்களில் ஒருவரான காயல் பட்டனம் மாநகர் பெற்றிருந்த அப்துல் ஹலிம் ஹாஜியார் அவர்களும் ஒருவர். புனித ஹஜ்ஜீக்கு வருகை தரும் தலைவர்களை அழைத்து சவூதி அரபியாவின் மன்னர்கள் விருந்து கொடுப்பது மரபாக இருந்து வருகிறது.
உலக தலைவர்கள் பங்கேற்ற அந்த மாநாட்டில் இந்திய நாட்டின் பெருமைகளை பெரிதும் பாராட்டி பேசினார்கள். இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற பெயரில் ஒரு பேரியக்கத்தை நடத்தி வருகிறீர்களே என ஆச்சிரியத்துடன் பல நாட்டின் தலைவர்களும் வியந்து பாராட்டி பேசினார்கள்.
மரண நிலையில் ஈமானின் உறுதி
காயிதே மில்லத் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது காயிதே மில்லத் அவர்களுடன் மருத்தவ மனையில் முஸ்லிம் லீக் முன்னோடிகளும் உடனிருந்தார்கள். அப்போது கேரளத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்களான ஷங்கைமிகு செய்யிதுனா அப்தூர் ரஹ்மான் பாஃபக்கி தங்கள், பூக்கோயா தங்கள் சமீபத்தில் மறைந்த ஆன்மீக மேதை ஷங்கைமிகு சிஹாப் தங்கள் அவர்களின் அன்பு தந்தை ஆகியோரும் உடனிருந்தார்கள். அப்போது காயிதே மில்லத் அவர்களை பார்த்து பாஃபக்கி தங்கள்அவர்களும், பூக்கோயா தங்கள்அவர்களும் இஸ்மாயில் சாஹிப் என்று பலமுறை அழைத்தார்கள். எந்த பதிலும் இல்லை சகராத் நடைப்பெறுகிறது மரண தருவாயில் இருக்கிறார்கள் எனக்கூறி என்னிடத்தில் அவ்ராத் தொகுப்பு கிதாபை கொடுத்து இதை காயிதேமில்லத் நெஞ்சில் ஓதி வாருங்கள் என்றார்கள். அதன்படி அடியேன் ஓதிவந்தேன். காயிதே மில்லத் அருகில் சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமது சாஹிப் காயிதே மில்லத்தின் மகனார் ஜே.எம். மியாகான் சாஹிப் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அன்றைய பொது செயலாளர் ஏ.கே. ரிஃபாய் சாஹிப் முஸ்லிம் லீக் முன்னோடிகளான வடகரை பக்கர் அண்ணன் இன்றைய மாநில துணைத்தலைவர் எஸ். கோதர் மைதீன் சாஹிப் மற்றும் முன்னோடிகளும் உடனிருந்தனர். காயிதே மில்லேத் உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தி தெரிந்து நாடெங்கும் உள்ள முஸ்லிம் லீக் தலைவர்கள் அரசியல் மேதைகளும், தலைவர்களும் காயிதே மில்லத் அவர்களை காண அலை அலையாய் வந்திருந்தார்கள். பெரிய குளத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றிருந்த தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களும் கலந்து கொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து விட்டு ஓடோடிவந்து காயிதே மில்லத் அவர்களை பார்த்து கதறி அழுது கண்ணீர் வடித்த காட்சி இன்னும் மறக்க முடியவில்லை.
கேரளத்தின் முதல்வராக பணியாற்றிய கேரள சிங்கம் சி.எச். முகமது கோயா முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் மஹ்பூபே மில்லத் சுலைமான் சேட் சாஹிப் தமிழக ஆளுனர் மற்றம் அமைச்சர்கள், தந்தை பெரியார் ஆகியோரும் காயிதே மில்லத் அவர்களை பார்த்து கண் கலங்கினார்கள். ஸ்டான்லி மருத்துவமனையில் மறைவெய்திய காயிதே மில்லத் உடல் குரோம் பேட்டை தயாமன்ஜிலில் வைக்கப்பட்டது. பின்னர் சென்னை புது கல்லூரியில் பார்வைக்காக வைக்கப்பட்டது. சரித்திர பிரசித்தி பெற்ற வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இன்றும் காயிதே மில்லத் கப்ரில் (நினைவிடத்தில்) சமுதாய மக்களும், அரசியல் தலைவர்களும் ஜியாரத் செய்து வருகிறார்கள்.
முஸ்லிம் லீக்கின் வெற்றிபிரகாசம்
காயிதே மில்லத் மறைவுக்குப்பிறகு காதிமுல் மில்லத் அப்துல் வஹாப் ஜானி சாஹிப் சிராஜூல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப் ஆகியோரும் சிறப்புடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கதை சிறப்புடன் நடத்திவந்தார்கள். இந்த தலைவர்களெல்லாம் காட்டிய வழியில் கெட்டுப்போகாமலும் பட்டுபோகாமலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளராகவும் தமிழக தலைவராகவும் இருந்து நம்முடையத் தலைவர் தியாகச்செம்மல் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் சிறப்புடன் நடத்தி வருகிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான இ. அஹ்மத் சாஹிப் அவர்களும் மிகச் சிறப்புடன் பணியாற்றி வருகிறார்கள். முஸ்லிம் லீக் புனித இயக்கம் நாடு முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
(இன்று வழுத்தூரில் துவங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சாளர் பயிற்ச்சி முகாமில் மாநில தொண்டரணி அமைப்பாளர் திருச்சி ஜி.எம்.ஹாஷிம் அவர்கள் இந்த உறையை வாசித்தார்கள்)
Permainan yang Sederhana Dengan Slot Online Terpercaya
10 months ago