ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு
தமிழக-அரபகத் தொடர்புகள்
தளபதி ஏ.ஷ ஃபிகுர் ரஹ்மான்
வருகின்ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மிக சிறப்பாக நடைபெறும் வகை யில் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அம் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் பெருமள வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் மொழி இலக் கியங்களுக்கு முஸ்லிம்கள் செய்துள்ள பங்களிப்பு களை நினைவுகூர்ந்து பதிவு செய் யும் பணியை இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர்கள் செய்து கொண்டிருக்கின் றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2, 3 தேதிகளில் தஞ்சை அதிராம்பட்டினத் தில் நடைபெற்ற இஸ் லாமிய தமிழ் இலக்கியக்கழக இலக்கியப் பெருவிழாவும், அங்கு வெளியிடப்பட்ட ஆய்வு மலரும் அமைந்துள் ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மார்க்க அணி செயலாளர் ஏ. ஷபீகுர் ரஹ்மான் தமிழகத் திற்கும் - அரபகத்திற்கும் இடையே யான வரலாற்றுத் தொடர்புகள் குறித்தும், தமிழ் மொழியின் மீது தாய்ச்சபை தலைவர்கள் கொண்டிருந்த பற்று குறித்தும் ஆய்வு கட்டுரை வாசித்தார்.
அக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் வரு மாறு-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்க தகுதியான மொழி தமிழே என்பதை வலியுறுத்தி அரசியல் நிர்ணய சபையிலே ஆற்றிய உரை அனைவரும் அறிந் ததே.
நம் தாய் மொழியான தமிழ் மொழி அருள்மிகு நகரங்களிலும் பிரகாசிக் கிறது. இஸ்லாமிய மார்க்கத் தின் புனித கடமைகளாக திகழும் புனித ஹஜ்ஜில் உலக முழுவதிலுமிருந்து வருகை தந்த 30 லட்சத்திற் கும் மேற்பட்டோர் மத்தியில் தமிழ் மொழியை கேட்டு இன்புறும் வாய்ப்பு ஆண்டு தோறும் கிடைக்கிறது. அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்யும் போது தமிழகம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, புருணை போன்ற நாடுகளில் வாழும் தமிழ் பேசும் சன்மார்க்க சீலர்கள் தாய்மொழியாம் இன்பத் தமிழில் உரத்த குரலில் இறைவனிடம் பிரார்த்திக் கொண்டிருக்கும் அழகிய காட்சியை காண முடிகிறது.
கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகவும், இஸ்லா மிய தமிழ் இலக்கியக் கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாள ராக திகழ்ந்த சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் ஹஜ் மேற் கொண்டிருந்த போது தமிழக ஹாஜிகள் மத்தியில் தமிழிலேயே அழகிய சொற் பொழிவு நிகழ்த்தினார். அந்த ஹஜ்ஜில் பங் கேற்ற இசை முரசு நாகூர் ஹனீபா இறைவ னிடம் கையேந்துங்கள். அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. என்ற பாடலை இனிய தமிழில் உரத்த குரலில் பாடி அரபி களையும் ஆச்சரியப்படுத்தி னார். 1977 ஹஜ்ஜின் போது தமிழக பொறுப்பாளராக பணியாற்றிய சங்கைமிகு செய்யது அப்துல் ரஹ் மான் ஹாஸிம் சில்லி அரபகத்தில் ஜித்தா துறைமுகத்தில் அழ கிய தமிழில் பேசி உரையாடி யதை காண முடிந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற மீலாதுந் நபி விழாவில் கலந்து கொண்டு அரபு - தமிழ் அகராதியை வெளியிட்டு சிறப்பித்துள் ளார்.
தமிழ் மொழி மீது அரபு மக்கள் நேசம் கொண்டுள் ளனர். தமிழ் பேசும் சகோ தரர்கள் பணியாற்றும் அரேபிய நிறுவனங்களின் பிரமுகர்கள் தமிழை ஆர்வ முடன் கற்றுக் கொண்டிருக் கின்றனர். அரபகத்திலி ருந்து முஹம் மது அஹமது என்ற நண்பர் லால் பேட்டை வந்திருந்தார். சென்னையி லிருந்து லால் பேட்டை வரும் வழியில் வழியெங்கும் அவர் கண்ட தமிழக மக்கள் - விவசாய பெருமக்கள் இடுப் பில் வௌ;ளை வேட்டியும், தோளில் வௌ;ளை துண் டும் அணிந்து சாலைகளில் நடமாடுவதை கண்டு இஃராம் உடைகளை போல் அணிந் துள்ளார்களே என்று ஆச்ச ரியப்பட்டார்.
தமிழகமும் - அரபகமும் உடை அணி முறையிலும் தொடர்பிருப்பது ஆச்சரிய மான ஒன்றுதான்.
Permainan yang Sederhana Dengan Slot Online Terpercaya
11 months ago
No comments:
Post a Comment