மௌலானா தளபதி.ஏ.ஷபீகுர் ரஹ்மான்
துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ் நாடு
அல்லாஹுத்தஆலாவின்அருள் பூத்துக் குலுங்கும் இப்புனித ரமளான் மாதத்தில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் திருக்குர்ஆன் ஷரீஃபை தஜ்வீது சட்டப்படி முறையாக இனியக் குரலில் ஓதும் காரிகளைக் கொண்டு ஓதப்படுகிறது.
வள்ளல் நபிகள் பெருமானார் ரசூல் ( ஸல் ) அவர்களின் மூலம் மனித சமுதாயத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் விஞ் ஞான உலகிலும் அற்புத சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது திருக்குர்ஆன் ஷரீஃப் அருளப்பட்ட புனிதமிகு மக்காவிலும் மாண்புமிகு மதீனாவிலும் இன்றும் லட்சக்கணக்கான தீனோர்கள் குர்ஆன் ஷரீஃபை ஓதும் காட்சி கண்ணுக்கும் கல்புக்கும் ஒளிபெற்று மகிழ்ச்சியைத் தருகின்றது .
மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்கள் திருக்குர்ஆன் ஷரீஃபின் மகத்துவத்தை மணிச்சுடர் நாளிதழில் எழுதி மகிழ்ந்துள்ளார்கள் .
இன்றும் மணிச்சுடர் நாளிதழில் ஒவ்வொரு நாளும் திருக்குர்ஆனின் வசனம் பற்றிய விளக்கவுரை தொடர்ந்து வெளியிடப்படுகிறது .
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து 16 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மாநாட் டினைப் பற்றியும் அதன் இனிய நிகழ்வுகள் பற்றியும் மணிச்சுடரில் செய்தி வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் முந்தைய ஆண்டுகளில் மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியரும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டிகளில் பார்வையாளராக பங்கேற்று மணிச்சுடர் நாளிதழிலும் சர்வதேச திருக்குர்ஆன் மாநாடுப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்கள்.
மணிச்சுடரின் செய்திகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்திகளை சிறப்புற வெளியிட்டு வந்தமைக்காக இவ்வாண்டு சர்வதேச திருக்குர்ஆன் மாநா ட்டு குழு மணிச்சுடர் நாளிதழுக்கு விருதினை அளித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவைத் தலைவரும் மணிச்சுடர் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இடம் பெற்றுள்ள சோழ நாட்டின் சமுதாயச் செம்மல் குத்தாலம் லியாகத் அலி அவர்கள் மணிச்சுடருக்கான இவ்விருதைப் பெற்றிருப்பது மணிச்சுடர் வெள்ளி விழா ஆண்டின் மகிழத்தக்க செய்தியாகும்.
இவ்விருது திருக்குர்ஆன் ஷரீஃபி ன் மகிமைப் பற்றி இனிக்க இனிக்க இன்பத்தமிழில் மணிச்சுடர் நாளிதழில் எழுதி வந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் அவர்களுக்கு கிடைத்த பரிசாகும்.
திருக்குர்ஆன் ஷரீஃபின் பெயரால் தாருல்குர்ஆன் பத்திரிகை நடத்தி திருக்குர்ஆனின் மகத்துவம் பற்றி மணிச்சுடர் நாளிதழில் எழுதி நாடெல்லாம் நாள் தோறும் திருக்குர்ஆன் மாண்புகள் பற்றி பேசியும்,எழுதியும் வரும் நம் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களின் தியாக மிகுந்த சேவைக்கு கிடைத்த பரிசாகும்.
25 அண்டுகளுக்கு முன்னர் புனித ரமளானில் நம் மணிச்சுடர் நாளிதழுக்காக அதன் கௌரவ பிரதிநிதியாக அமீரகத்தில் தமிழகத்தின் இளைஞர்கள் பணியாற்றிய பகுதியெல்லாம் சுற்றி சுற்றி மணிச்சுடருக்காக சந்தாக்கள் சேர்த்து தொண்டாற்றிய,இன்றும் தொண்டாற்றி வரும் இன்ஷா அல்லாஹ் என்றும் தொண்டாற்ற இருக்கின்ற தொண்டன் என்ற அடிப்படையில் மணிச்சுடருக்கு கிடைத்த விருதுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்தை தெரிவிப்பத்தில் மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் ......